×
 

சீனாவில், கொரோனாவை போல் அச்சுறுத்தும் புதிய வைரஸ்: "பீதி வேண்டாம்" என்கிறது, இந்தியா

கடந்த 2019 டிசம்பரில், சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பு மற்றும் பொருளாதார மந்தம் காரணமாக பல மாதங்களாக உலகமே ஸ்தம்பித்தது.

அதன் சோக சுவடுகள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில் சீனாவில் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (ஹெச் எம் பி வி) என்ற புதிய வகை வைரஸ் நோய் தொற்று மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது. 

அனைவரும் எளிதில்  புரிந்து கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும் என்றால், ணசாதாரண சளித் தொல்லையை ஏற்படுத்தும் ஃப்ளூ வைரஸ் போன்ற சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் இது. இந்த வகை வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்குப் பரவும். 

கொரோனா பரவலுக்கும் இதே காரணம் தான் சொல்லப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது .கொரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. 

இதையும் படிங்க: சீனாவுடன் கெட்ட ஆட்டம்... மாலத்தீவு அதிபரின் பதவியை பறிக்க சதி..! கோடிகோடியாய் பணத்தை கொட்டிய இந்தியா..?

உலக சுகாதார நிறுவனத்திற்கு சீனா மறுப்பு..

சீன மருத்துவமனைகளில் காய்ச்சல், தொண்டை வலி பாதிப்புகளுக்காக மக்கள் கூட்டங்கூட்டமாக காத்திருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது தான் உலக நாடுகளை பீதி அடையச் செய்துள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை அமல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில், புதிய வைரஸ் குறித்த விவரங்களை அளிக்குமாறு சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், கொரோனா போன்ற புதிய வைரஸ் பரவுவதாக எழுந்த சந்தேகங்களை சீனாவின் வெளியுறவுவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் மறுத்து இருக்கிறார்.

சீன அரசின் நோய்க் கட்டுப்பாட்டு முகமை இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், “நிமோனியா போன்ற பாதிப்பு ஏற்படுவதாக எழுந்துள்ள புகார்களை கண்காணித்து வருகிறோம். குளிர் காலம் என்பதால் சுவாசப் பாதை தொற்றோடு பலரும் மருத்துவமனைகளை நாடுகின்றனர். டிசம்பர் 16 முதல் 22 வரை இத்தகைய தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.” எனத் தெரிவித்திருந்தது. ஆனால் எச்எம்பி வைரஸ் பற்றி எதுவும் குறிப்பிட்டு கருத்து எதுவும்தெரிவிக்கவில்லை.

பீதி அடைய வேண்டாம் என்கிறது இந்தியா..

சீனாவில் பரவும் புதிய வைரஸால் மற்ற உலக நாடுகள் போல் இந்தியாவிலும் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுகாதார சேவைகள் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர் அடுல் கோயலிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “எச்எம்பி வைரஸ் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை. மெடாநிமோ வைரஸ் மற்ற சுவாசப்பாதை தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்களைப் போல மிகச் சாதாரணமானதே.சாதாரண சளி ஏற்படுத்தும் வைரஸ் போன்றதே. உள்நாட்டில் சுவாசப் பாதை தொற்றால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தரவுகளையும் ஆராய்ந்துவிட்டோம். 

டிசம்பர் 2024 தரவுகளின் படி நாட்டில் வைரஸ் தொற்று பாதிப்பு எதுவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கவில்லை. எச்எம்பி தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சைக்காக ஆன்ட்டி வைரல் மருந்துகள் ஏதும் தேவையில்லை.” என்று கூறியிருக்கிறார். 

இதையும் படிங்க: தண்ணியில கண்டம்... பிரம்மபுத்ரா நதியில் சீனா கட்டும் வல்லரசு அணை... இந்தியாவை அழிக்க இப்படியொரு சதியா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share