×
 

நாங்க எதுக்கும் ரெடி..! அமெரிக்கா போரை விரும்பினால் வரலாம்... அதிபர் ட்ரம்புக்கு ஷாக் கொடுத்த சீனா..!

அமெரிக்கா போரை விரும்பினால் நாங்கள் போருக்கு தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு சீனா கடுமையான பதில் அளித்துள்ளது.

பென்டானில் போதை மருந்து கடத்தில் விவகாரத்தில் சீனா மீது தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பழிசுமத்துவதற்குப் பதிலடியாக சீனத் தூதர் இந்த பதிலை அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க அரசு சீனாவை சரிசமமாக நடத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் சீன தூதரகம் எச்சரித்துள்ளது.

சீன தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ பென்டனில் விவகாரத்தை தீர்க்க உண்மையாகவே அமெரிக்கா விரும்பினால், சரியான செயல் என்னவென்றால், சீனாவை சரிசமமாக நடத்தி, அதன்பின் ஆலோசிப்பது. அமெரிக்கா போரைத்தான் விரும்புகிறது என்றால், அது வரிப் போர், வர்த்தகப் போர் அல்லது எந்தவிதமான போராக இருந்தாலும் சீனா தயாராக இருக்கிறது, கடைசி முடிவு கிடைக்கும் வரை போராடும்” என எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப்புக்குள் ‘ஈரம்’..! 13 வயது சிறுவன் அமெரிக்காவின் ‘சீக்ரெட் சர்வீஸ்’ இயக்குநராக நியமனம்!

சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ பென்டனைல் போதை மருந்து விவகாரம் பொய்யானது. சீனப் பொருட்கள் மீது வரியை உயர்த்துவதற்கு அமெரிக்க அதிபர் சாக்குபோக்குக் கேட்கிறார். சீனாவின் நலன்களை பாதுகாக்கவும், நலன்களுக்காகவும் சட்டப்பூர்வமாக, தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

பென்டனைல் விவகாரத்தில் நெருக்கடிக்கு அமெரிக்கா மட்டுமே காரணம். மனிதநேயத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க மக்களின் நலன் கருதி, நாங்கள் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்தோம். எங்களின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, எங்கள் மீது பழிசுமத்துகிறது, அழுத்தம் கொடுத்து, வரி உயர்த்துவோம் என மிரட்டுகிறது. அவர்களுக்கு உதவ எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இது அமெரிக்காவின் பிரச்சினைகளைத் தீர்க்காது, நமது போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் ஒத்துழைப்பைக் குறைமதிப்பிற்கு மதிப்பிடும்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து  இந்தியா, சீனா, கனடா, மெக்சிக்கோ நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது தவிர சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரியும் விதித்துள்ளார். 

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருட்கள் குறிப்பாக பீன்ஸ், மக்காச்சோளம், மாட்டிறைச்சி, பன்றிஇறைச்சி, மீன்கள், காய்கறிகள், பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீதம் வரி 15 சதவீதமாக உயர்த்தப்படும் என சீன நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா மீதான பரஸ்பர வரித் திட்டம் ஏப்ரல் முதல் அமல்... அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share