அடுத்த 25 வருஷத்துக்கு தொகுதி மறுசீரமைப்பு பேச்சே வேண்டாம்..! சட்டசபையில் முதலமைச்சர் உரை..!
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயகம் பாதிக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த 14 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. இதற்கிடையே சட்டசபையில் இன்று முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
இந்த நிலையில், தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயகம் பாதிக்கப்படும் என எச்சரித்தார். தொகுதி மறு சீரமைப்பை எதிர்த்த முதல் மாநிலம் தமிழ்நாடு என்றும் கடந்த 14ஆம் தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: கடமை தவறிய தமிழக அரசு.. இதுவரை 81 பேர் பலி.. தேவை உடனடி தடை.. சூதாட்ட செயலிக்கு எதிராக ராமதாஸ் போர்க்கொடி..!
மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசித்ததாக தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று மாநில முதலமைச்சர்கள், கர்நாடக துணை முதலமைச்சர், முக்கிய கட்சித் தலைவர்கள் நேரடியாகவும், ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் காணொளி வாயிலாக பங்கேற்றதாக கூறினார். அப்போது தொகுதி மறு சீரமைப்பால் தமிழகம் போன்ற மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது, தண்டிக்கப்பட கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவித்த முதலமைச்சர், தொகுதி மறு சீரமைப்பு திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதாக கூறினார்.
இது மட்டுமல்லாது தமிழகத்தில் பிற மாநில கட்சிகளின் அடைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும், இந்த முன்னெடுப்புக்கு ஆதரவு தந்த எதிர்கட்சி அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இது மட்டுமல்லாது தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும் என்ற முழக்கத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்று நமது மாநில உரிமைகளை மீட்டு எடுக்கவும், நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெற்றிடவும், தமிழக எம்.பி.,க்களுடன் தொகுதி மறு சீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்து பிரதமர் மோடியிடம் முறைகேடப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கூப்பிட்டா நாங்களும் வந்துருப்போம்... டிவிஸ்ட் அடித்த அண்ணாமலை!!