×
 

செல்வப்பெருந்தகையுடன் கூட்டு..? சவுக்கு மேட்டரின் பரபரப்பு ஆடியோ..! சேகர்பாபுவிடம் பேசிய ரௌடி எங்கே..?

இவர்கள் இருவருக்கும் இடைஞ்சலாக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங்கையும் அகற்றி விட்டதால் இவர்கள் வைத்ததுதான் இப்போது சட்டம்.

‘நான் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டபோது, துடைப்பம், செருப்புகளோடு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்ததும் அமைச்சர் சேகர்பாபுதான். செல்வப்பெருந்தகையும், சேகர்பாபுவும், ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புள்ளியில் இணைகிறார்கள்’ என தனது எக்ஸ்தளப்பதிவில் ஒரு ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

மேலும், கட்டப்பஞ்சாயத்துகள், ரவுடித்தனங்கள், சட்டவிரோத காரியங்கள் இவை அனைத்திலும் சேகர் பாபுவும், செல்வப்பெருந்தகையும் கூட்டு. சி.எம்.டி.ஏவின் அமைச்சராக இருப்பதால் நிலம் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துகள் அனைத்தையும் இருவரும் ஒன்றாக இணைந்தே செய்கிறார்கள்.

இதையும் படிங்க: பிறக்கும் புத்தாண்டு ஏற்றத்தை கொடுக்கட்டும்..! செல்வப் பெருந்தகை தமிழ் புத்தாண்டு வாழ்த்து..!

இவர்கள் இருவருக்கும் இடைஞ்சலாக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங்கையும் அகற்றி விட்டதால் இவர்கள் வைத்ததுதான் இப்போது சட்டம். தற்போது ஶ்ரீபெரும்புதூரில் எம்.எல்.ஏவாக இருக்கும் செல்வம், இத்தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து தொகுதியை மாற்றலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார். ரிசர்வ் தொகுதியான சென்னை எழும்பூரில் போட்டி போட்டால் நான் வெற்றி பெற வைக்கிறேன் என்று சேகர் பாபு செல்வத்துக்கு உறுதியளித்துள்ளார்.  எப்படியாவது எழும்பூரை காங்கிரஸுக்கு ஒதுக்க வைத்தால், தற்போது எழும்பூர் எம்.எல்.ஏவாக இருக்கும் திமுகவின் பரந்தாமனுக்கு சீட் கிடைக்காமல் செய்து விடலாம் என்பது சேகர் பாபுவுக்கு கூடுதல் வசதி.

எழும்பூர் எம்.எல்.ஏ பர்ந்தாமனுக்கும், பெரம்பூரில் எம்.எல்.ஏ ஆகலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஆர்டி சேகருக்கும் சீட் கிடைக்காமல் செய்து விட வேண்டும் என்பதை முழு வீச்சோடு செயல்படுத்த சேகர்பாபு முனைப்பில் இருக்கிறார். வடசென்னையில், தன்னை மீறி கட்சியில் ஒருவரும் வளர்ந்து விடக்கூடாது.  ஸ்டாலின் திமுகவுக்கு வேண்டுமானால் தலைவராக இருக்கலாம். வடசென்னைக்கு நான் தான் தலைவர் என்பதில் சேகர் பாபு தெளிவாக இருக்கிறார்''' என பரபரப்பை கிளப்பி இருக்கும் சவுக்கு சங்கர், அமைச்சர் சேகர்பாபு, ஒருவருடன் உரையாடியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சவுக்கு மேட்டரை வெளியிடவா ? | சேகர்பாபுவிடம் பேசிய ரௌடி | வெளியான பரபரப்பு ஆடியோ! |@arivalayam @PKSekarbabu #DMKFails #audioleak #sekarbabu #SavukkuShankar #DMKGovt #kolathur pic.twitter.com/i3Jz6qqxhN

— Saattai (@SaattaiOnline) April 12, 2025

 

சேகர்பாபு கீழ் செயல்படும் ரவுடி‘கொளத்தூர் தன்ராஜ்' என்பவர் சென்னை கொளத்தூரில் பழைய கார் வாங்கி விற்கும்  தொழில் செய்பவர். திமுகவின் முன்னாள் இளைஞரணி நிர்வாகி மகேஷ் குமாரின் வலதுகரம். சென்னை மாநகராட்சி 6வது மண்டல திமுக சேர்மேன் மற்றும் 6வது வார்டு கவுன்சிலர் சரிதாவின் கணவர்தான் மகேஷ் குமார். மகேஷ்குமாருக்கு ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளை செய்வது. அமைச்சர் சேகர்பாபு கீழ் செயல்படும் ஒரு ரவுடி என்று சொல்லலாம். கடந்த 24 மார்ச் 2025 அன்று எனது வீட்டில் மலத்தை வீசி நடந்த தாக்குதலை அமைச்சர் சேகர்பாபு சொல்லி மகேஷ் குமார் தனது வலதுகரம் கொளத்தூர் தன்ராஜிடம் சொல்கிறார்.

தன்ராஜுக்கு பேசியபடி சேகர்பாபு பணம் கொடுக்கவில்லை.,கொளத்தூர் தன்ராங் எங்கே?இதனால், அமைச்சர் சேகர்பாபுவுக்கு தன்ராஜ் போன் செய்து, பேசியபோது அதை பதிவு செய்து வைக்கிறார். இந்த ஆடியோ பதிவு வாட்ஸப்பில் பரவுகிறது. இதையடுத்து, சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த 20 காவலர்கள் ரவுடி மகேஷ் குமார் தலைமையில் இவர் வீட்டுக்கு சென்று மிரட்டி போனை பறித்துள்ளனர்.

 

இப்போது கொளத்தூர் தன்ராஜ் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. சேகர் பாபுவின் உத்தரவில், 20 காவலர்களை அனுப்பியது ஆணையர் அருண் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார் சவுக்கு சங்கர். 

இதையும் படிங்க: ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடு.. பாஜகவுக்கு சவுக்கடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் செல்வபெருந்தகை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share