வயதில் மூத்த பெண்ணுடன் காதல்.. வடமாநில பெண்ணிடம் செல்போன் பறிப்பு.. ஐபோன் மோகத்தால் கம்பி எண்ணும் காதல் ஜோடி!
சென்னையில் நடந்து சென்ற வடமாநில பெண்ணிடம் அட்ரஸ் கேட்பது போல செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடி கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஆஷல் பேம். வயது 24. இவர் சென்னை மாம்பலம் நாகாத்தம்மன் கோயில் பகுதியில் தங்கி, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆஷல் பேம், கடந்த 5ம் தேதி பணி முடிந்து தனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் இளம்பெண்ணுடன் வந்த தனியார் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர், ஆஷல் பேமிடம் ஏதோ ஒரு முகவரியை காட்டி கேட்டுள்ளார். ஏதும் அறியாத ஆஷல் பேம் முகவரியை சொல்ல நெருங்கி வந்தபோது அவர் வைத்திருந்த, விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு அந்த ஜோடி கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிஉள்ளது.
பதறிப்போன ஆஷல் பேம், இதுகுறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை துவங்கினர். அதில் ஆஷல் பேமிடம் கைவரிசை காட்டியது மதுரவாயல் பகுதியை சேர்ந்த 19 வயதே ஆன சூர்யா என்பதும், அவன் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவர் பின்னால் அமர்ந்து இருந்து அவனது காதலி ஆவடியை சேர்ந்த 20 வயதான சுஜிதா என்பதும் தெரிந்தது.
இதையும் படிங்க: மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்- கோலத்தில் எதிர்ப்பு ஜாலம் காட்டிய இல்லத்தரசிகள்..!
இருவரையும் கைது செய்து போலீசார் தங்களது பாணியில் விசாரிக்க மேலும் பல விஷயங்கள் வெளிவந்தன. மதுரவாயல் சூர்யா மீது பைக் திருட்டு, உண்டியல் திருட்டு என பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சூர்யா திருட்டு தொழிலை 17 வயதில் இருந்து செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் டெலிவரி நிறுவனத்தில் பகல் நேரத்தில் வேலை பார்த்தாலும் இரவு நேரத்தில் தனது காதலியுடன் சேர்ந்து செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் சூர்யா ஈடுபட்டு வந்துள்ளான்.
அந்த உடமைகளை விற்று ஜோடியாக இருவரும் ஜாலியாக இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவரது காதலி சுஜிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். சுஜிதாவின் கணவர் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர். இதனால் அவர் அடிக்கடி சிறைக்கு சென்று விடுவாராம். இந்த நிலையில், சுஜிதாவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவது கணவரின் பெற்றோர் அவரை விரட்டி அடித்துள்ளனர்.
இரண்டு குழந்தைகளை வளர்த்து வரும் சுஜிதா, பகலில் தூய்மை பணியாளராக வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் காதலன் சூர்யாவுடன் சேர்ந்து வழிபறியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் காதலர் தின பரிசாக தனக்கொடு ஐபோன் வேண்டுமென சுஜிதா, சூர்யாவிடம் கேட்டுள்ளார். அதை உழைத்து வாங்கித்தர எண்ணாத சூரியா, ஆஷா பேமினின் செல்போனை பறித்து காதலர் தின பரிசாக கொடுத்துள்ளான். இந்த வழக்கில் தான் தற்போது இருவரும் கம்பி எண்ணி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு தெலங்கானா அரசு சலுகை: பாஜக எதிர்ப்பு