ஃபர்ஸ்ட் நைட்ல இப்படியா நடக்கும்… புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!
உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்த அடுத்த நாளே தம்பதிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் என்பது இன்றைய 90’ஸ் கிட்ஸ்-களின் எட்டாக்கனியாக மாறி வருகிறது. 30 வயதை தாண்டியும் சிலர் இன்னும் திருமணம் முடிக்காமல் தவித்து வருகின்றனர். காரணம், போதிய ஊதியம் இல்லை, சொந்த வீடு இல்லை என பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதம் ஆகிக்கொண்டே போகிறது அவ்வாறு இருக்கையில் உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்த அடுத்த நாளே தம்பதிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் உள்ள கான்ட் என்ற பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ஷிவானி என்ற பெண்ணும் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிந்தைய சடங்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இருவரையும் முதலிரவுக்கு அனுப்பி வைத்தனர் பிரதீப்பின் உறவினர்கள். மறுநாள் காலை புதுமண தம்பதியினர், தங்களது அறைக்கதவை திறக்கவே இல்லை என்று கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் கதவுகள் திறக்கப்படாததால் உறவினர்கள் சந்தேகமடைந்தனர்.
இதையும் படிங்க: முதலிரவில் ஷாக் கொடுத்த மனைவி… ஆபத்தான நிலையில் கணவன்!!
இதை அடுத்து கதவை தட்டிய உறவினர்கள் உள்ளே இருந்து சத்தம் கேட்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு படுக்கையில் புதுப்பெண் ஷிவானி சடலமாகி கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வருவதற்குள் ஃபேனில், மணமகன் பிரதீப் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் இதுக்குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மணமக்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுக்குறித்த முதற்கட்ட விசாரணையில், மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய உறவுகள் தொடர்பான பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் கள்ளக்காதல் விவகாரமா? என்பது குறித்து 2 தரப்பு பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜ் கரண் நாயர்.
இதையும் படிங்க: உ.பி யில் அதிர்ச்சி!! 35 வயது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!! போலீசார் விசாரணை