டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி..! கடும் வீழ்ச்சியை சந்தித்த கச்சா எண்ணெய் விலை..!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உலகளாவிய பரஸ்பர வரிவிதிப்பு எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 60 டாலருக்கும் கீழே சரிந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.அதன்படி இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 34 சதவீதம் வரி, வியட்நாமுக்கு 46% கூடுதல் வரி விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதேபோல, அமெரிக்காவில் தயாரிக்காமல் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்று இருந்த போது, இந்தியாவின் வரி விதிப்பை ட்ரம்ப் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்தியா வரியை குறைக்க தொடங்கி உள்ளது. ஆனால் தற்போது பதிலடி வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதாவது, ஒரு நாடு அமெரிக்காவிற்கு விரிக்கும் வரியை பொறுத்து அமெரிக்காவின் வரி அமையும். ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவீதம் வரி இருக்கிறது என்றால் அமெரிக்கா இதுவரை 15 சதவீதம் விதித்து வந்திருக்கலாம்... ஆனால் தற்போது இந்தியா விதிக்கும் 30 சதவீத வரியை மீண்டும் இந்தியாவிற்கு அமெரிக்கா விதிக்கும். இதுதான் பதிலடி வரி.
இதையும் படிங்க: அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க்கிற்கு எதிர்ப்பு.. வலுக்கும் மக்கள் போராட்டம்..!
இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $60க்கும் கீழே சரிந்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உலகளாவிய பரஸ்பர வரி கட்டணங்கள் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தொடர் வர்த்தக சரிவு காரணமாக அமெரிக்க கச்சா எண்ணெய் விலை இன்று ஒரு பீப்பாய் $60-க்கு கீழே குறைந்தது.
இதையும் படிங்க: ட்ரம்ப் எபெக்ட்..! அமெரிக்கா வரி விதிப்பால் இந்தியாவின் ஜிடிபி 0.3% குறையும்: பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை..!