‘டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்’: ஐஐடி ரூர்கே மின்அஞ்சலைப் பார்த்து ‘ஷாக்’ ஆகிய கேட் விண்ணப்பதாரர்..
பொறியியல், அறிவியல், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கேட் 2025ம் ஆண்டு நுழைவுத் தேர்வு எழுதக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஐஐடி ரூர்கோயில் இருந்து வந்த மின்அஞ்சல் பலரையும் அதிர்ச்சியடைச் செய்தது.
ஐஐடி ரூர்கே சார்பில் கேட்-2025 நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வுகள், பிப்ரவரியில் 4 பிரிவுகளாக நடத்தப்படுகிறது, இதற்கான ஹால் டிக்கெட் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டன. நாட்டில் உள்ள 7 ஐஐடிக்கள் மூலமும், பெங்களூரு ஐஐஎம்சி மூலமும் இந்த கேட் தேர்வுகள் நடப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஐடி ரூர்கே கல்வி நிலையத்திலிருந்து தேர்வு எழுத விண்ணப்பத்திருந்த பலருக்கும் அனுப்பப்பட்ட மின்அஞ்சலில் எழுதப்பட்டிருந்த வாழ்த்து வாசகங்கள் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
ஏனென்றால் பலருக்கும் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் “ டியர் இட்லி, சட்னி நோ சாம்பார்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது கண்டு விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த மின்அஞ்சலை விண்ணப்பதாரர்கள் பலரும் செல்போனில் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தங்கள் ஆதங்கத்தைப் பதிவிட்டனர். அதில் ஒரு விண்ணப்பதாரர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ கேட்-2025 குழப்பம், மாணவர்களின் டேட்டா பேஸ் மற்றும் சர்வரில் யாரோ சிலர் மோசமாக விளையாடியுள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பயனாளி எக்ஸ் தளத்தில் ஐஐடி ரூர்கே தரப்பில் வந்திருந்த மின்அஞ்சலை பதிவிட்டு, தமிழக முதல்வருக்கும், ஐஐடி ரூர்கேவுக்கும் டேக் செய்துள்ளார். அதில் “ஐஐடி ரூர்கே என்னை இட்லி, சட்னி, நோ சாம்பார் என்று பதிவிட்டுள்ளது, இதற்கு நான் எப்படி பதில் அளிப்பது. ஆனால், இது இனவெறியுடன் வெளியிடப்பட்ட கருத்து” எனத் தெரிவித்துள்ளார்
இன்னும் ஏராளமான விண்ணப்பதாரர்கள், தங்களுக்கும் இதேபோன்ற வாழ்த்து மின்அஞ்சல் வந்துள்ளது, இட்லி சட்னி நோ சாம்பார் என்ற வாசகங்கள் வந்துள்ளன என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த மின்அஞ்சல் நிச்சயமாக பாதுகாப்பு குறைபாடுகளால் ஹேக்கர்கள் சிலரால் அனுப்பப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: GATE 2025 நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு: எவ்வாறு பதிவிறக்கம் செய்வது..?
இந்த மின்அஞ்சலை சிலர் தீவிரமாக எடுத்துக்கொண்டு கவலைப்பட்ட நிலையில் சிலர் விளையாட்டாகவும் பதிவிட்டனர். அதில் ஒருவர் “ ஏன் சாம்பாரை வெறுக்கிறீர்கள் காலை உணவுக்கு சாம்பார் ஏற்றது” எனத் தெரிவித்தார். நாட்டின் உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும், கேட் தேர்வை நடத்தும் கல்வி நிலையத்திலிருந்து இதுபோன்ற தரமற்ற மின்அஞ்சல்கள் அந்த நிறுவனத்தின் தரத்தை குறைக்கும். யார் இதை செய்திருந்தாலும் அது ஐஐடிக்கு அவப்பெயர்தான்.” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: GATE 2025 நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு: எவ்வாறு பதிவிறக்கம் செய்வது..?