×
 

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி.. டெல்லி, மும்பை, உள்பட முக்கிய நகரங்கள் ஹை அலர்ட்..!

காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதல் எதிரொலியாக டெல்லி, மும்பை, உள்பட முக்கிய நகரங்களுக்கு உச்சகட்ட அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான தலைநகர் டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட பல நகரங்களுக்கு உச்சகட்ட அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பின் மிகக்கொடூரமான தாக்குதலாக காஷ்மீரில் நேற்று சுற்றுலாப்பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கருதப்படுகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியாவுக்கு 4 நாட்கள் அரசு முறைப்பயணமாக வந்திருக்கும் நேரத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். ஜெய்ப்பூர், ஆக்ரா ஆகிய நகரங்களை சுற்றிப்பார்க்க ஜேடி வான்ஸ் செல்ல இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: காஷ்மீருக்கு முதல் ‘வந்தே பாரத் ரயில்’.. வரும் 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

இந்த தாக்குதலையடுத்து, தலைநகர் டெல்லியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்கள், மெட்ரோ ரயில்நிலையம் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் பதற்றமான பகுதிகளில் போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டு, கூட்டம் அதிகமாக இருக்கும்  இடங்களில் அதைக் கலைக்க விரைவுப்படையும் குவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் போலீஸ் டிஜிடி நகரின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் அதிக கண்காணிப்புடனும், ரோந்துப்பணியை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திடமான வாகனங்கள், நபர்களைப் பிடிக்க நகரில் முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்து சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ஷாப்பிங் மால்கள், ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில்நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “அனைத்து மூத்த காவல் அதிகாரிகள், துணை ஆணையர்கள் தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது, நகரில் பல இடங்களில் அவசரகால சோதனைச் சாவடிகளையும் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் மாநிலம் முழுவதும் போலீஸாருக்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் நகரில் முக்கிய பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெய்ப்பூர் ரயில் நிலையம், அமர் கோட்டை, அரண்மனை உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களில் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பஞ்சாப் போலீஸார் அமிர்தசரஸ், தங்கக் கோயில், இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதி ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுல்ளது. உத்தரப்பிரதேசத்திலும் மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கடற்புற எல்லைகளில் பாதுகாப்பும், ரோந்துப்பணியும் தீவிரப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அது எங்கள் கழுத்து நரம்பு… பலோச் தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவத்தை ஒப்பிட்ட பாக், ராணுவ தலைவர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share