×
 

துண்டுச் சீட்டில் புது யுக்தி..! தலைவரின் ஸ்டைலை உல்டாவாக்கிய திமுக எம்.பி., கல்யாணசுந்தரம்..!

வேறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்டதால் பதில் அளிக்க முடியாமல் திணறினார்.

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராகவும், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் தலைவராகவும் பதவி வகித்தவர் திமுக எம்.பி கல்யாணசுந்தரம்.

கும்பகோணம் அருகேயுள்ள பம்பப்படையூர் கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரத்தின் தந்தை சுந்தர்ராஜன் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். 1952-ல் பம்பப்படையூரில் அப்போதைய முதல்வர் இராஜாஜி, காமராஜர், கக்கன், ஜி.கே.மூப்பனார் ஆகியோரை அழைத்து வந்து பூமிதான இயக்கத்திற்கு தனது சொந்த நிலத்தில் 2 ஏக்கரை தானமாக வழங்கியவர்.

சுந்தர்ராஜனின் இரண்டாவது மகன் கல்யாணசுந்தரம். தந்தையைப் போலவே தன்னையும் பொது வாழ்விற்கு அர்ப்பணித்துக் கொண்டவர். இவரது குடும்பம் அக்காலத்தில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பூண்டி வாண்டையார், உக்கடை தேவர், குன்னியூர் சாம்பசிவம அய்யர், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற குடும்பங்களை ஒத்த பாரம்பரியமும், செல்வாக்கும் பெற்றது.

இதையும் படிங்க: ஆளுநரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.. 2026இல் புதிய முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.. பாஜக அதிரடி!!

10-ம் வகுப்பு படித்துவந்த கல்யாணசுந்தரம், பெரியாரின் பகுத்திறவு கொள்கையை ஏற்று சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்கிட தனது படிப்பைத் துறந்து அறிஞர் அண்ணா அறிவித்த மாணவர் போராட்டத்தை முன்னெடுத்து அரசியலில் அடியெடுத்து வைத்தார்.

மாணவர் போராட்டம் மூலம், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய கல்யாணசுந்தரம் திமுகவின் ஒருங்கிணைந்த கும்பகோணம் ஒன்றியச் செயலாளராக 1972லிருந்து 1998 வரை ஐந்து முறை 27 வருடங்கள் தொடர்ந்து பொறுப்பு வகித்துள்ளார்.

ஒருங்கிணைந்த கும்பகோணம் ஒன்றியப் பெருந்தலைராக பதவி வகித்தார்.  1997-ம் ஆண்டு தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால்வள தலைவராக பதவி வகித்தார். 2006-ம் ஆண்டு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராக இருந்துள்ளார். இப்படி பாரம்பரியமும், அரசியல் அனுபவமும் கொண்ட திமுக எம்.பி., கல்யாணசுந்தரத்தின் தற்போதைய செய்தியாளர் சந்திப்பு சந்தி சிரித்து வருகிறது. கும்பகோணத்தில்  திமுக எம்.பி., கல்யாணசுந்தரம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு, துண்டு சீட்டில் கேள்விகளை கொடுத்து அந்த கேள்விகளை மட்டும் கேட்குமாறு கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. வேறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்டதால் பதில் அளிக்க முடியாமல் திணறினார்.

அவர் செய்தியாளர்களுக்கு கொடுத்த துண்டுச் சீட்டில் , உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பற்றி? ஆளுநரின் அடாவடி போக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கையை திமுக எதற்கு ஏற்றுக்கொள்ளவில்லை? உச்சநீதிமன்றமே 10 மசோதாக்களுக்கு அனுமதி அளித்தது குறித்து..? என நான்கு கேள்விகள் அடங்கி இருந்தது. ஏற்கெனவே திமுக தலைவர் துண்டுச்சீட்டை பார்த்து பேசுவதாக சர்ச்சைகள் உள்ளன. ஆனால் இவரோ ஒருபடி மேலே சென்று கேள்விகளையே துண்டுச்சீட்டில் எழுதி செய்தியாளர்களிடம் கொடுத்ததும், செய்தியாளர்களின் கேல்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதையும் படிங்க: இனி உங்க நாடகம் எடுபடாது; தக்க பதிலடி கொடுப்போம்... திமுகவை சாடிய விஜய்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share