×
 

எல்லா பழியும் பாஜக மீது... மோதலை அண்ணாமலை- ஆளுநர் ரவி இடையே மடைமாற்றும் திமுக..!

கச்­சத்­தீவு பற்றி இவ்­வ­ளவு அக்­க­றை­யோடு பேசும் ஆளு­நர் ரவி,‘பத்­தாண்டு காலத்­தில் கச்­சத்­தீவை மீட்க பா.ஜ.க. அரசு ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை?

கச்­சத்­தீவு பற்றி இவ்­வ­ளவு அக்­க­றை­யோடு பேசும் ஆளு­நர் ரவி,‘பத்­தாண்டு காலத்­தில் கச்­சத்­தீவை மீட்க பா.ஜ.க. அரசு ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை?’என்­றல்­லவா கேட்­டி­ருக்க வேண்­டும்?'' என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது. 

ஆளுநர் ரவிக்கு அண்ணாமலை பதில் என வெளியாகி உள்ள அந்தக் கட்டுரையில் . ''இந்­திய மீன­வர்­கள், இலங்­கைக் கடற்­ப­டை­யால் தாக்­கப்­ப­டு­வது குறித்து, இலங்­கைக் கடற்­ப­டைக்கு கண்டனம் தெரி­விக்­கத் தெரி­யாத ஆளு­நர் ஆர்.என்.ரவிக்கு, பா.ஜ.க. அண்­ணா­ம­லையே பதில் சொல்லி விட்­டார்.

இலங்கை அர­சையோ, கடற்­ப­டை­யையோ கட்­டுப்­ப­டுத்­தவோ, விமர்­சிக்­கவோ தைரி­யம் இல்­லாத ஆளு­நர் ரவி, கச்­சத்­தீவு விவ­கா­ரத்­தைச் சொல்லி ஒன்­றிய பா.ஜ.க. அர­சைக் காப்­பாற்ற முயற்சித்து இருக்­கி­றார்.

இதையும் படிங்க: உங்க உபதேசம் எங்களுக்கு தேவையில்லை அண்ணாமலை.. கனிமொழி காட்டமான பதிலடி..!

சமூக வலை­த­ளத்­தில் ஆளு­ந­ரால் வெளி­யி­டப்­பட்­டுள்ள பதி­வில், “ராமேஸ்­வ­ரத்­துக்கு நான் சென்று இருந்­த­போது, துன்­பத்­தில் உழ­லும் நமது மீன­வச் சமு­தா­யத்­தைச் சேர்ந்த சகோ­தர, சகோ­த­ரி­க­ளைச் சந்­தித்­தேன். அவர்­க­ளின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்­கம்கொள்­கி­றேன். நமது மீன­வர்­க­ளின் வாழ்­வா­தார கவ­லை­க­ளுக்கு கார­ணம்கடந்த 1974ஆம் ஆண்டு அநி­யா­ய­மான ஒப்­பந்­தம்­தான். கச்சத்­தீவு சுற்­று­வட்­டார கடல் பகு­தி­யில் நமது மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­யைப் பறித்த­தன் மூலம் மத்­தி­யி­லும் தமிழ்­நாட்­டி­லும் அப்­போது ஆட்­சி­யில் இருந்த அர­சு­கள் பெரும் பாவத்தை இழைத்­தன. அன்­றி­லி­ருந்து இன்றுவரை நமது மீன­வச் சமூ­கம் தொடர்ந்து இன்­னல்­களை அனு­ப­வித்து வரு­கி­றது.

இலங்கை அர­சால் அவர்­கள் கைது செய்­யப்­பட்டு, அவர்­க­ளின் பட­கு­கள் பறி­மு­தல் செய்யப்டுகின்றன. இந்த நீடித்த பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்வு வேண்­டும். இதற்கு மத்­திய, மாநில அர­சு­கள் இணைந்து செயல்­பட வேண்­டும். இந்­தப் பிரச்­சி­னையை அர­சி­ய­லாக்­கு­வ­தற்­குப் பதி­லா­க­வும்,மத்­திய அர­சைக் குறை கூறு­வ­தற்­குப் பதி­லா­க­வும், ஆக்­க­பூர்­வ­மான அணு­குமு­றையை மாநில அரசு மேற்­கொண்­டால் அது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் கண்­ணீ­ரைத் துடைப்­ப­தற்கு பெரி­தும் உத­வும். எல்­லா­வற்­றுக்­கும் மேலாக,1974இல் நடந்த தவ­றுக்கு சம பொறுப்பு, அன்­றைய மத்­திய ஆட்சி கூட்­ட­ணி­யில் இருந்த இன்று மாநி­லத்தை ஆளும் கட்­சிக்­கும் உள்­ளது” எனக் குறிப்­பிட்­டார்.

அதா­வது இன்­றைய பிரச்­சி­னைக்­கான கார­ணம் என்ன என்று சொல்­­வதற்­கும், அதற்­குத் தீர்வு காண்ப­தற்­கும் முயற்­சிக்­கா­மல் காங்­கி­ரஸ் கட்­சி­யை­யும், தி.மு.க.வையும் குறை சொல்­வ­தி­லேயே குறி­யாக இருக்­கி­றார் ஆளு­நர்.

ஆனால் பா.ஜ.க. மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை வெளி­யிட்ட அறிக்­கை­யில், ஆளு­ந­ருக்கு பதில் சொல்­லப்­பட்­டுள்­ளது.“இலங்­கை­யில் புதிய அதி­பர் வந்த பிறகு கைது­கள் அதி­க­ரித்­துள்­ளது. மீன­வப் பிரச்­சி­னையை சட்­டம் ஒழுங்­கா­கவோ, எல்லை பிரச்­சி­னை­யா­கவோ அணு­கா­மல் மனி­தா­பி­மான பிரச்­சி­னை­யாக அணுக வேண்­டும், என்றே இந்­திய அரசு இலங்கை அர­சி­டம் வலி­யு­றுத்தி வரு­கி­றது. மீன­வர் பிரச்­சினை தொடர்­பாக நான் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் ஜெய்­சங்­க­ருக்கு எழு­திய கடிதத்திற்கு, அவர் எழு­திய பதில் கடி­தத்­தில் இந்­தியா – இலங்கை கூட்டு பணிக்­குழு விரை­வில் நடை­பெ­றும், என அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்” என்று சொல்லி இருக்­கி­றார் அண்ணாமலை.

இலங்கை அர­சு­தான் மீன­வர்­களை கைது செய்­கி­றது, இந்­திய -இலங்கை பேச்சை தொடங்க வேண்டும் என்று அண்­ணா­ம­லையே சொல்லி இருக்­கி­றார்.

இப்­போ­தைய மீன­வர் பிரச்­சினை என்­பது கச்­சத்­தீவு பகு­தி­யில் மீன் பிடிக்­கச் சென்­றார்­கள், செல்கிறார்­கள் என்­பது அல்ல. இந்­திய எல்­லைக் கட­லுக்­குள் போனாலே அவர்­க­ளுக்கு இலங்­கைக் கடற்­ப­டை­யால் தொல்­லை­கள் ஏற்­ப­டு­கின்­றன. அது­தான் உண்மை. மொத்­தத்­தில் இந்­திய மீனவர்களை கட­லுக்­குள் வர­வி­டா­மல் விரட்­டு­கி­றார்­கள். இதனை யார் தடுக்க வேண்­டும்? ஒன்­றிய அர­சு­தானே தடுக்க வேண்­டும்? இலங்கை அர­சோடு அவர்­கள்­தானே பேச்­சு­வார்த்தை நடத்தி மீன் பிடி உரி­மை­யைப் பெற்­றுத் தர வேண்­டும்.

இந்­தியா - இலங்கை பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டாக வேண்­டும். அது­தான் நிரந்­த­ரத் தீர்­வாக அமைய வேண்­டும். தமிழ்­நாட்டு ஆளு­ந­ராக இருக்­கிற ரவிக்கு உண்­மை­யான அக்­கறை இருக்குமானால் இந்­திய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் ஜெய்­சங்­க­ரைச் சந்­தித்து அந்­தப் பேச்சுவார்த்­தைக்கு ஏற்­பாடு செய்ய வேண்­டும்.

‘பா.ஜ.க. அரசு அமைந்­தால் ஒரு மீன­வன் கூட தாக்­கப்­பட மாட்­டான்’என்று சொன்­ன­வர் நரேந்­திர மோடி. அவ­ரது பத்­தாண்டு கால ஆட்­சி­யில் 3 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மீன­வர்­கள் இலங்கை அர­சால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். கைது செய்­வ­தும் விடு­விக்­கப்­ப­டு­வ­தும் தொடர் கதை­யாக இருக்கிறது.

‘இலங்கை நாட்­டால் தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளுக்கு பிரச்­சினை. பாகிஸ்­தான் நாட்­டால் குஜ­ராத் மீனவர்­க­ளுக்கு பிரச்­சினை. இரு மாநில மீன­வர்­க­ளும் இது தொடர்­பாக ஆலோ­சித்து முடி­வெ­டுத்து செயல்­ப­டு­வார்­கள்’என்று 2014 தேர்­த­லுக்கு முன்­ன­தாக ராம­நா­த­பு­ரத்­தில் மோடி பேசி­னார். பத்தாண்டு காலத்­தில் இப்­படி ஒரு பேச்­சு­வார்த்தை நடந்­ததா?

“2016 ஆம் ஆண்டு இந்­திய – இலங்கை மீன­வர் இடையே அமைச்­சர்­கள் மட்­டத்­தில் பேச்சுவார்த்தைகள் நடை­பெற்­றது. ஒவ்­வொரு மூன்று மாதத்­துக்கு ஒரு­முறை மீன­வர்­கள் சந்­திப்­பது என்­றும், ஒவ்­வொரு ஆறு மாதத்­துக்கு ஒரு­முறை இரு­நாட்டு அமைச்­சர்­கள் சந்­தித்து பேசு­வது என்­றும் முடி­வெ­டுக்­கப் ­பட்­டது. இரு­நாட்டு கடற்­படை அதி­கா­ரி­க­ளும் இதில் இடம் பெறு­வார்­கள் என்று சொல்லப்­பட்­டது. இந்­தக் குழு­வின் முதல் கூட்­டம் 2017 ஜன­வரி 2 ஆம் நாள் கொழும்­பு­வில் நடைபெற்றது. 

மீன­வர்­கள் மீது எந்த வன்­மு­றை­யும் செலுத்­தக் கூடாது, உயிர் இழப்­பு­கள் ஏற்­ப­டக் கூடாது என்று இக்கூட்­டத்­தில் மீன­வர்­கள் சார்­பில் கோரிக்கை வைக்­கப்­பட்­டது. இதனை இலங்கை அர­சாங்­க­மும் ஏற்­றுக் கொண்­டது. ஆனா­லும் இலங்­கைக் கடற்­ப­டை­யால் அடக்­கு­முறை தொடர்ந்தே வரு­கி­றது. ஏன் இந்த பேச்­சு­வார்த்தை தொட­ர­வில்லை?” என்று மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்­கி­றார்­கள். இதற்கு ஆளு­நர் பதில் என்ன?

கச்­சத்­தீவு பற்றி இவ்­வ­ளவு அக்­க­றை­யோடு பேசும் ஆளு­நர் ரவி,‘பத்­தாண்டு காலத்­தில் கச்­சத்­தீவை மீட்க பா.ஜ.க. அரசு ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை?’என்­றல்­லவா கேட்­டி­ருக்க வேண்­டும்?'' எனத் தெரிவித்துள்ளது!

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு பாதகம்..முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share