×
 

இந்த அதிகாரிகள் போல் இருக்காதீர்கள்...நான் அனைத்தையும் கவனிப்பேன்...டென்ஷனான அமைச்சர் கே.என்.நேரு 

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு பேச்சை கவனிக்காத அதிகாரிகளை பொதுவெளியில் அமைச்சர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, கலைவாணர் அரங்கில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, எஸ்.எம்.நாசர், சி.வி.கணேசன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் விஜயகுமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் எம்எல்ஏக்கள், மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி விவகாரம்... தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்...தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த ஆய்வு கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். அமைச்சர் கே.என்.நேரு பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சரின் பேச்சை கவனிக்காமல் ஒரு ஆண் அதிகாரியும், பெண் அதிகாரியும் தங்களுக்குள் பேசிக்கொண்டும், செல்போனை பார்த்துக்கொண்டும் இருந்ததை பார்த்து அமைச்சர் நேரு டென்ஷன் ஆனார். 

மேடைக்கு கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அதிகாரிகளை கவனித்த அமைச்சர் கே.என்.நேரு, அந்த அதிகாரியை சுட்டிக்காட்டி, கூப்பிட்டார். 'நான் இங்கே பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே உங்களுக்குள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?' என அனைத்து அதிகாரிகளுக்கும் முன்பு கேள்வி எழுப்பினார். இதனால் அந்த இருவரும் தடுமாறினார்கள். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திரு திருவென்று முழித்தனர். கூட்டத்தில் இருந்த மற்ற அதிகாரிகள் அமைதியாக அதை கவனித்தனர்.

அப்போது அமைச்சர் நேரு கோபமாக “நீங்கள் என்னென்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் பேசும்போது நீங்கள் என்னை பாருங்கள். நான் எல்லோரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அனைவரின் முன்பாகவும் தவறாக பேசினால் உங்களுக்கு சங்கடம் வந்துவிடும் என்பதால் பேசக்கூடாது என நினைக்கிறேன்” என்று எச்சரித்தார்.

அப்போது அந்த அதிகாரி, 'மைக் சரியாக இல்லை' என விளக்கம் கொடுத்தார். உடனே அமைச்சர் நேரு, ”மைக்கில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் பேசுவதை முதலில் கவனியுங்கள்” என கோபமாக கூறினார். மேலும் 'இங்கு வந்துள்ள அதிகாரிகள் அனைவரும் மேல் விசாரணை அதிகாரிகளை போல் இல்லாமல் நாங்கள் என்ன பேசுகிறோம் என்ன சொல்கிறோம் என்பதை கவனித்து செயல்பட வேண்டும்.

உங்கள் துறையின் தலைவர் உள்ளார், துறை செயலாளர் இருக்கிறார், அவர்கள் பேசுவதை கவனியுங்கள்” என்று அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: தர்காவில் பலியிடுவது வழக்கம்... திருப்பரங்குன்றம் சர்ச்சை பின்னணியை புட்டு,புட்டு வைத்த திருமா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share