பள்ளியை மூடாதீங்க மா.. காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க MLA..
பள்ளியை விற்பனை செய்வது பாவ செயல் குழந்தைகளின் நலன் கருதி தொடர்ந்து பள்ளியை தொடர்ந்து நடத்துங்க என பள்ளி நிர்வாகி காலில் மண்டியிட்டு மன்றாடிய சட்டப்பேரவை உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது
பள்ளியை விற்பனை செய்வது பாவ செயல் குழந்தைகளின் நலன் கருதி தொடர்ந்து பள்ளியை தொடர்ந்து நடத்துங்க என பள்ளி நிர்வாகி காலில் மண்டியிட்டு மன்றாடிய சட்டப்பேரவை உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த தனியார் பள்ளியின் , விளையாட்டு மைதானம் ஏற்கனவே விற்கப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், பள்ளி கட்டிடம் வேறு ஒரு தனியாருக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனை அறிந்த பெற்றோர், பள்ளி நுழைவாயிலில் திரண்டு பள்ளி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் . இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பா.ம.க எம்எல்ஏ அருள் பள்ளி தாளாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது பாமக எம்எல்ஏ அருள் திடீரென பள்ளி தாளாளர் காலில் விழுந்து, "பள்ளியை மூடும் எண்ணத்தை தயவு செய்து கைவிடுங்க.. பள்ளியை மூடாதீங்கம்மா" என்று கெஞ்சினார்.
தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் அருள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: "அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்" ..புஷ்பா பட பாணியில் பேசிய அன்பில் !