போப் பிரான்சிஸ்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய திரவுபதி முர்மு...!
மறைந்த போப் பிரான்சிஸ்க்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
எளிமை மற்றும் இரக்க குணத்தின் முழு உருவமாக போற்றப்பட்ட கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தார். கல்லீரல் அழற்சி காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, போப் பிரான்சிஸ்க்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வாடிகனுக்கு புறப்பட்டார்.
இதையும் படிங்க: வாடிகனில் போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலம்..! இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு..!
மதகுருக்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வாடிகன் சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போப் ஆண்டவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் சென்று போப் ஆண்டவர்க்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேபோல் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வாடிகனுக்கு சென்ற அமைச்சர் நாசர் போப் பிரான்சிஸிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: அடுத்த போப் ஆண்டவர் யார்..? தேர்வு குழுவில் 4 இந்திய கார்டினல்கள்..!