கட்சிப் பொறுப்பை உதறிய துரை வைகோ..! தந்தை வைகோவுடன் முக்கிய ஆலோசனை..!
கட்சிப் பொறுப்பை துரை வைகோ உதறி தள்ளியுள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளரும் தனது தந்தையுமான வைகோவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கட்சிக்கு ஒருவர் அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாகவும் அது... தான் பொறுப்பு ஏற்றதில் இருந்து தான் தொடர்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். மதிமுகவின் முதன்மை தொண்டனாக இருந்து பணியாற்றுவேன் என்று கூறிய அவர், தனது கட்சி பொறுப்பை மட்டும் உதறித் தள்ளி இருக்கிறார்.
கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோவின் முடிவு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதனை தொலைக்காட்சி வாயிலாக தான் அறிந்ததாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ..! யார் அந்த ஒருவர்..? அதிர்ச்சியில் தொண்டர்கள்..!
இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளரும் தனது தந்தையுமான வைகோவை துரை வைகோ சந்தித்தார். அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வைகோவுடன் துரை வைகோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
இதையும் படிங்க: கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ..! யார் அந்த ஒருவர்..? அதிர்ச்சியில் தொண்டர்கள்..!