அதிமுக கூட்டணியில் பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி..! உறுதி கொடுத்த எடப்பாடியார்..?
அதிமுக- தேமுதிக, அண்ணியார் பொதுச் செயலாளர் பிரேமலதா அவர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ன ஒப்பந்தம் போட்டோம் என்று அவர்களுக்கு தெரியும்.
அதிமுக கூட்டணியில் பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி கொடுத்துள்ளதாக தேமுதிக இளைஞர் அணித் துணைசெயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டு இருந்ததாகவும், விரைவில் எம்.பி பதவிக்கு யார் செல்வார் என்பதை முடிவு செய்வோம் என தெரிவித்து இருந்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. இந்நிலையில் அதனை மறுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'யார் ஒப்பந்தம் போட்டார்கள். நாங்கள் தேமுதிகவுக்கு எம்.பி பதவி என எங்கேயாவது சொன்னோமா? என அதனை மறுத்தார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் தேமுதிக சமூகவலைதளமான எக்ஸ் தளத்தில், தர்மம் வெல்லும்... நாளை நமதே..'' எனப்பதிவிட்டு இருந்தனர். ஆனால் அந்தப்பதிவு 18 நிமிடங்களில் நீக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரேமலதா தரப்பினரை அழைத்து கவலைப்பட வேண்டாம். உங்களை கைவிட மாட்டோம்' என சில வாக்குறுதிகளை அளித்ததால் பிரேமலதா சமாதானம் ஆகிவிட்டார் என்றும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: பிரேமலதாவை ஏமாற்றிய எடப்பாடியாரெல்லாம் எம்.ஜி.ஆரா..? செல்லூர் ராஜுவை நெருக்கும் தேமுதிக..!
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள தேமுதிக இளைஞர் அணித் துணைசெயலாளர் பாலமுருகன், ''திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யாவெல்லாம் எங்கள் கட்சியை விமர்சிக்கிறார். அவரே ஒரு கட்சியில், ஒரு கொள்கையில் இருப்பவர் கிடையாது. சூர்யாவின் அப்பா ஒரு கட்சியில் இருக்கிறார். மகன் இன்னொரு கட்சியில் இருக்கிறார். அப்பா இருக்கும் திமுக கட்சியில் முடியாததால் இன்னொரு கட்சிக்கு செல்கிறாய். அங்கேயும் உன்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. திருப்பி இன்னொரு கட்சிக்கு செல்கிறாய்.
உனக்கு என்ன கொள்கை இருக்கிறது? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? எங்கள் பொது செயலாளர் அண்ணியார் பிரேமலதா அவர்களை பற்றி பேசுவதற்கு உனக்கு தகுதியே கிடையாது. எங்களுக்கு ராஜ்ய சபா சீட் தருகிறார்கள் இல்லை, தரவில்லை. 2026-ல் ஆட்சி அமைக்கும் போது துணை முதல்வர் ஆவதற்கு கூட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. எங்களுக்குள் அதிமுக- தேமுதிக, அண்ணியார் பொதுச் செயலாளர் பிரேமலதா அவர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ன ஒப்பந்தம் போட்டோம் என்று அவர்களுக்கு தெரியும்.
மைக்கில் பேசும் போது, மீடியாவிடம் பேசும்போது சின்னதாக வார்த்தை தடுமாற்றங்கள் ஏற்படும். அவர் எவ்வளவு வேலையில் ஈடுபட்டிருப்பார். அந்தப் பதற்றத்தில்தான் எடப்பாடியார், தேமுதிகவுக்கு ராஜ்ய சபா கொடுப்பதாக யார் சொன்னது? என்று கேட்டு இருப்பார். அடுத்து எடப்பாடி பழனிச்சாமி சுதாரித்துக் கொண்டு அன்று மாலையை அண்ணியாரை அழைத்து, '' நீங்கள் எதுவும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு சொன்னது போல ராஜ்ய சபா சீட் தருகிறோம்'' என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி விட்டார்.
அத்தோடு ''2026லும் நமது கூட்டணி தொடரும். அந்த கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் உங்களுக்கு துணை முதல்வர் பதவி தருகிறோம்'' என்று எடப்பாடி பழனிசாமி அண்ணியார் பிரேமலதாவிடம் வாக்குக் கொடுத்துள்ளார். அந்த அளவிற்கு அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியில் ஒற்றுமையாக இருக்கிறோம். இதைக் கெடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த கட்சியினர் ஒன்றாக இருக்கிறார்கள். இதைக் கெடுத்து விட்டால் இரு கட்சிகளும் பிரிந்து விடும். நாம் திருப்பி அதிமுக கூட்டணியில் சேரலாம் என்று நினைக்கிறார்கள்.
உங்கள் பகல் கனவு பலிக்காது. அடுத்த 2026-ல் திமுக ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிகவின் இரும்பு மங்கை பிரேமலதா எந்த கூட்டணியில் இருக்கிறாரோ அந்த கூட்டணி தான் ஆட்சியை கைப்பற்றும்'' என தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபா சீட் கொடுக்கவே தயங்கும் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதாவை துணை முதல்வராக்க வாய்ப்பு இருக்கிறதா..?
இதையும் படிங்க: பிரேமலதாவை ஏமாற்றியதன் பின்னணியில் பாமக… எம்.பி-யாகும் நடிகை… எடப்பாடியாரின் சந்தர்ப்பவாதம்..!