எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் எதிரொலி .. திருப்பதியில் மாஸ்க் கட்டாயம் .. தேவஸ்தான அறங்காவலர் குழு அறிவிப்பு ..!
எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்...
எச்.எம்.பி.வி. (HMPV) எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை, அதனைத் தொடர்ந்து 8 மாத ஆண் குழந்தை என இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் என இருவருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் திருப்பதி மலையில் செய்தியாளர்களுடன் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி. ஆர். நாயுடு, எச் எம் பி வி வைரஸ் காரணமாக பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் பற்றி பேசிய அவர், வைகுண்ட ஏகாதிசி தினமான பத்தாம் தேதி முதல் 19ஆம் தேதி வரை திருப்பதி மலையில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் ஆகிய ஏதாவது ஒன்றை எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். டிக்கட் இல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது என்றார்.
வைகுண்ட ஏகாததி தினமான பத்தாம் தேதி அன்று காலை திருப்பதி மலையில் ஏழுமலையானின் தங்க தேரோட்டமும், 11ஆம் தேதி காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெறும்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய வசதியாக திருப்பதியில் உள்ள எட்டு கவுண்டர்கள் மற்றும் திருமலையில் உள்ள ஒரு கவுண்டர் ஆகியவற்றில் இலவச தரிசன டோக்கன்கள் நாளை ஒன்பதாம் தேதி அதிகாலை 5 மணி முதல் வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய பி. ஆர். நாயுடு தரிசன டிக்கெட், டோக்கன்கள் ஆகியவை இல்லாமல் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு 10 நாட்களும் தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.பத்தாம் தேதி முதல் 19ஆம் தேதி வரை திருப்பதி மலைக்கு நேரடியாக வரும் விஐபி பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும். விஐபி பிரேக் தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என்றும்
3000 போலீசார் 1500 விஜிலன்ஸ் ஊழியர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பத்து நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். லட்டு பிரசாதம் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க 8 லட்சம் லட்டுக்கள் எப்போதும் இருப்பு இருக்கும் வகையில் லட்டு உற்பத்தி நடைபெறுகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: எச்எம்பிவி வைரஸ் ஆபத்தானதா, குழந்தைகளை என்ன செய்யும்? குழந்தை நல மருத்துவர்கள் கூறுவது என்ன?