சட்டவிரோத பண பரிவர்த்தனை..! ED வளையத்தில் நடிகர் மகேஷ்பாபு..!
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஏப்ரல் 27 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனங்களில் அமலாக்காத்துறை சோதனை நடத்தியது. ஐதராபாத்தில் உள்ள இந்த இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் மக்களிடம் பண மோசடி செய்துள்ளதாகவும் ஒரே இடத்தை பல பேரிடம் விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தகுதி மற்றும் ஒப்புதல் அளிக்காத வீடுகளை விற்றுள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த நிறுவனங்களின் விளம்பர தூதராக நடிகர் மகேஷ் பாபு இருந்ததால் அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 27 ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை கூறியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் மகேஷ் பாபு 5.9 கோடி ரூபாய் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க மகேஷ் பாபுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சோனியா, ராகுல்காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..! அமலாக்கத்துறை அதிரடி..!
இதையும் படிங்க: திமுக அரசின் மீது அமைச்சர்களுக்கே அதிருப்தி.. வானதி சீனிவாசன் பரபரப்புக் குற்றச்சாட்டு.!!