×
 

எதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டம்..? கேள்வி எழுப்பிய இபிஎஸ்.. உதயநிதி சொன்ன நீட் விலக்கு ரகசியம் எங்கே..?

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி தர மறுத்துவிட்டார். விதிகளுக்கு புறம்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதா என அப்பாவு அதிருப்தி தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஆட்சிக்கு முன்பு, வந்த பின்பு என இரட்டை வேடம் போடும் கட்சி திமுக.. இபிஎஸ் கண்டனம்..!

ஒவ்வொரு முறையும் ஏதேனும் காரணங்களைக்கூறி எங்கள் கவன ஈர்ப்புத் தீர்மானங்களுக்கு அனுமதி தர மறுக்கிறீர்கள் என சபாநாயகர் அப்பாவுவை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை இருக்கையில் அமரச் செய்ய சபாநாயகர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஒருகட்டத்தில் தங்களை எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருக்கிறது. உண்மை நிலையை சட்டசபையில் பேசினால் வெளியே வரும் அல்லவா?* மக்கள் பிரச்சனையில் எந்த பாகுபாடும் காட்டாமல் நாங்கள் குரல் எழுப்பி வருகிறோம். தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க. அரசு வாக்குறுதி தந்தது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தங்களிடம் ரகசியம் இருப்பதாக உதயநிதி கூறினார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குக்காக பேசிய முதலமைச்சர், தற்போது வேறு வழியின்றி அனைத்து கட்சி கூட்டம் கூட்டி உள்ளார். நீட் விவகார வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக கூறிவிட்டு இப்போது கூட்டம் ஏன்? மக்களை ஏமாற்றுவதற்காகவே அனைத்து கட்சி சட்டமன்ற குழு தலைவர்கள் கூட்டம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வந்த பின்பு என இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி தி.மு.க. தான்.

இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்றது. தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவும் தெரிவித்தது. ஆனால் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பயம்... எகிறியடிக்கும் புகழேந்தி... பறந்தது வக்கீல் நோட்டீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share