×
 

அதிரும் அதிமுக... அடுத்தடுத்து நடந்த சண்டையால் இபிஎஸ் அப்செட்!!

முன்னாள் அமைச்சர்களின் சர்ச்சைகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

அதிமுக பொதுக்கூட்டத்தில் பொன்னாடை அணிவிக்க வந்த கட்சி நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ராஜேந்திர பாலாஜி. இவர், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில், அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் ராஜேந்திர பாலாஜிக்கு சால்வை அணிவிக்க வரிசையில் காத்திருந்தனர். அப்போது, விருதுநகர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் வரிசையில் நிற்காமல் அனைவரையும் முந்திக்கொண்டு ராஜேந்திர பாலாஜிக்கு சால்வை அணிவிக்க வந்தார்.

இதையும் படிங்க: தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக.. ஜெயக்குமார் பேச்சுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி..!

இதனைக் மேடையில் இருந்தபடி பார்த்த ராஜேந்திர பாலாஜி, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் நந்தகுமாரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால், ராஜேந்திர பாலாஜிக்கும், நந்தகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நந்தகுமார் அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டுச் சென்றார். இதேபோல் நேற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில், பங்கேற்ற அதிமுக நிர்வாகி பிரவீன் என்பவர் எழுந்து நின்று ‘எங்களுக்கு இந்தக் கூட்டம் குறித்து எந்த ஒரு அழைப்பும் கொடுக்கவில்லை’ என கேள்வி எழுப்பினார். இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்களால் பிரவீன் தாக்கப்பட்டார்.  இதனால் அதிமுக கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இன்று  ராஜேந்திர பாலாஜியால் அதிமுக கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். முன்னாள் அமைச்சர்களின் சர்ச்சைகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.  

இதையும் படிங்க: அதிமுக நிர்வாகிக்கு பளார் விட்ட முன்னாள் அமைச்சர்.. ஆவேசமடைந்த ராஜேந்திர பாலாஜி.. அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன.?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share