×
 

தை மாதம் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி... கோவையில் இருந்து அரசியல் யுத்தத்தைத் தொடங்கும் இபிஎஸ்...

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தான் தேர்தல் நடைபெற உள்ளது என்றபோதிலும், இப்போதே அரசியல் கட்சிகள் விறுவிறுப்புடன் களமாட தொடங்கி விட்டன. எப்போதும் போல் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது அஇஅதிமுக.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாது வேறுபல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளனவாம். அந்த தகவல்கள் அதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளதாம். அப்படி என்ன முடிவுகள் என்று இரட்டை இலை வட்டாரத்தில் விசாரித்தால் கிடைக்கின்ற தகவல்கள் ருசிகரமாக உள்ளன.

பிறக்க உள்ள தை மாதத்தின் முதல் நாளில் கோவை மாநகரில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளாராம். நாளொன்றுக்கு 3 சட்டமன்ற தொகுதிகளையாவது கடக்க வேண்டும் என்பது திட்டங்களில் ஒன்றாம். வாரமொருமுறை பொதுக்கூட்டத்தை கூட்டி பொதுமக்களுடன் உரையாடவும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம். 

இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் விஜய் ரியாக்‌ஷன்...எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த.. நாட்டிலே...எம்ஜிஆர் பாடலை சொல்லி பதிலடி...

இந்த தேர்தல் சுற்றுப்பயணத்தில், அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மீண்டும் மக்கள் மன்றத்தில் நினைவுபடுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாம். மேலும் கடந்த 4 ஆண்டுகால திமுக அரசின் சட்டம் ஒழுங்கு முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்பன உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். 

அதேபோன்று கூட்டணி குறித்து பொதுவெளியில் கட்சியினர் யாரும் பேசக் கூடாது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. தொலைக்காட்சி விவாதங்கள், யூ டியூப் சேனல்கள் போன்றவற்றில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும்போது கூட்டணி குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருவது சரியல்ல என்று இபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.  முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட கூட்டணி குறித்து இப்போது எதுவும் பேசிவிட வேண்டாம் என்று இபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளாராம். நேரம் வரும்போது அதுபற்றி அதிகாரபூர்வமாக கூறலாம் என்றும் அதுவரை அமைதி காக்குமாறு உத்தரவாம். 

மேலும் இளைஞரணியை வலுப்படுத்துவது, மாணவரணியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது போன்றவற்றில் மாவட்ட செயலாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளாராம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். இது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ, அதிமுகவுக்கு பொருந்தி வருவதாக குதூகலிக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசா? தேர்தல் திட்டமா? கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை ஒரு ரிவைண்டிங்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share