×
 

14வது குழந்தைக்கு அப்பா ஆனார் எலான் மஸ்க்... 4வது மனைவிக்கு பிறந்த 4வது குழந்தை..!

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்கிற்கு 14-வது குழந்தை பிறந்துள்ளது. அவரின் 4வது மனைவி ஷிவான் ஜில்ஸ் 4வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

ஷிவான் ஜில்ஸுக்கு 4வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கெனவே இரட்டைக் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கும் நிலையில் எலான் மஸ்க்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத்தகவலை எலான் மஸ்கின் 4வது மனைவி ஷிவான் ஜில்ஸ் தனது 3வது குழந்தை ஆர்காடியா பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். எலான் மஸ்க் மற்றும் அவரின் மனைவி ஷிவான் ஜில்ஸ் இருவருமே தங்களுக்கு பிறந்த 3வது மற்றும் 4வது குழந்தை குறித்து வெளியுலகிற்கு தெரியாமலே வைத்திருந்தனர். 2024ம் ஆண்டில்தான் 3வது குழந்தை  பிறந்துள்ளது என்பதையே எலான் மஸ்க், ஷிவான் வெளியிட்டனர்.

எலான் மஸ்க், ஷிவான் தம்பதிக்கு 4வது குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகிவிட்டன. ஷிவான் ஜில்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ நானும், மஸ்கும் 4வது குழந்தை பிறந்தது குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க முடிவு செய்தோம். எங்களின் 3வது குழந்தை ஆர்காடியா பிறந்தநாளின்போது இந்த விஷயத்தை வெளிப்படுத்த முடிவு செய்தோம். எங்களுக்கு 4வது குழந்தை பிறந்துள்ளது, அவருக்கு செல்டன் லைசர்கஸ் என பெயரிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘டெஸ்லா கார்’ வாங்கலியா! இந்தியாவில் விற்பனை ஏப்ரலில் தொடக்கம்! விலை தெரியுமா?

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கிற்கு 12 குழந்தைகள் உள்ளன அதில் ஜில்ஸ் மூலம் மட்டும் 4 குழந்தைகள் உள்ளன. இரட்டையர்கள் ஸ்ட்ரைடர் மற்றும் அசுரே, ஆர்காடியா, 4வதாக செல்டன் பிறந்துள்ளார். 2002ம் ஆண்டு எலான் மஸ்கிற்கு முதல் குழந்தை முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் மூலம் பிறந்த நிலையில் அவருக்கு இரட்டையர்களும், ஐவிஎப் சிகிச்சை மூலம் 3 குழந்தைகளும்  பிறந்தன. அதன்பின் இசைக்கலைஞர் கிரிம்ஸ் மூலம் 3 குழந்தையும் எலான் மஸ்கிற்கு பிறந்தன.

இதையும் படிங்க: குழந்தை குட்டிகளோடு மோடியை பார்த்த எலான் மஸ்க்..! விரைவில் இந்தியாவில் டெஸ்லா

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share