×
 

பல இடங்களில் தொடரும் பணி நீக்கம்..! 40 வயதுடைய நபர்களே முதல் டார்கெட்..! தப்பித்துக் கொள்வது எப்படி?

பணி நீக்கங்களில் 40 வயதுடைய நபர்கள் தான் முதல் டார்கெட்..! தப்பித்துக் கொள்வது எப்படி?

தற்போதைய பரபரப்பான அவசர உலகத்தில் 40 வயதுடைய நபர்களே அதிகளவில் பணி நீக்க பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என, நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒரு மனிதனின் நாற்பது வயது என்பது தனது தொழில் முறை வாழ்க்கையின் முதன்மையான காலமாக கருதப்படுகிறது. சரியான அனுபவத்தை பெற்றிருக்கும் காலமாகும் அது. நிதிப் பொறுப்புகள் அதிக அளவில் அதிகரிக்கும் சமயமாகவும் பார்க்கப்படுகிறது. சம்பளமும் அதிகமாக இருக்கும் நேரம் அது.தலைமை பதவிகள் தேடி வரும் காலமாகும் இப்படி பல விதமான அனுகூலங்களை அடையக்கூடிய இந்த உச்சத்தில் தான் ஈவு இரக்கமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்படுவதால் பெருமளவில் 40 வயதை கடந்தவர்கள் பாதிக்கப்படுவதாக தற்போதைய புள்ளி விவர குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாம்பே சேமிப்பு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாந்துனு தேஷ் பாண்டே கூறுகையில் 40 வயதுடைய நிபுணர்கள் பெரும்பாலும் அதிகமான வேலை சுமையை சுமக்கிறார்கள் அதுமட்டுமன்றி குடும்பம் சார்ந்து குழந்தைகளின் கல்விக்கான செலவு கனவு இல்லங்களுக்கான ஈஎம்ஐகள் வண்டி வாகனங்களுக்கான மாத கட்டணங்கள் என தொடர்ந்து குடும்பத்திற்காக உழைக்கும் பருவமாக உள்ளது.

 கால ஓட்டத்தினால் பெரும்பாலும் பலர் சேமிப்பு என்னும் விஷயத்தை மறந்து விட்டு ஓடிக்கொண்டே இருப்பதால் திடீரென பணி நீக்கம் செய்யப்படும் போது பெரிய அளவில் ஏமாற்றத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகின்றனர் என தேஷ் பாண்டே சுட்டிக்காட்டினார்.

 40 முதல் 50 வயதுடைய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் போது, நிறுவனங்களின் உற்பத்தி திறனும் பாதிக்கப்படுவதாக கூறினார்.

இதுபோன்று தற்போது ஆங்காங்கே நிகழும் 40 வயதுடையவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டால், இந்த சுமையிலிருந்து தப்பிப்பது எப்படி? என்பதற்கான சில டிப்ஸ்களும் கொடுக்கப்படுகின்றன.

பொருளாதார ரீதியில் மிகப்பெரிய இழப்பையும் மனரீதியான அழுத்தத்தையும் திடீர் பணி நீக்கங்கள் ஏற்படுத்துகின்றன இதிலிருந்து தப்பிக்க AI திறன் மேம்படுத்துதலை அதிகம் படித்து வைத்துக் கொள்ள வேண்டும்,அடுத்ததாக சேமிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் சொந்த தொழில் தொடங்கும் மனநிலையையும் எந்நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இது பற்றி மேலும் கூறுகையில் புதிய வேலைவாய்ப்பு அல்லது புதிய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் தயாரிப்பு முயற்சி மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் பயிற்சி ஆகியவை கருத்தில் கொண்டு புதிய தொழில் தொடங்க வேண்டும் என்றும் எந்த தொழிலை தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் சரியான கணிப்பு இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

தொழிலை ஆரம்பித்த உடன் முழு முயற்சியுடன் ஈடுபட்டு திறன்களை மேம்படுத்துவது சரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் தொடர்ச்சியான கற்றல் தகவமைப்பு மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவை நீண்ட கால தொழில் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு அவசியமானதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மும்பை தாக்குதல்: தஹவூர் ராணா நாளை டெல்லி அழைத்து வரப்படுகிறார்: பாட்டியாலா நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share