×
 

சொன்னதை செய்து காட்டிய சீமான்; தலைகீழாக மாறிய ஈரோடு கிழக்குத்தொகுதி களநிலவரம்! 

ஈரோடு கிழக்குத் தொகுதி  இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்குத் தொகுதி  இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்று வரை 9 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பொங்கல் அன்று வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என ஏற்கனவே சொன்னது போல், இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிருவார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்திரகுமார் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு போட்டியாக பெண் வேட்பாளரை நாம் தமிழர் கட்சி களமிறக்கியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைதேர்தல்...வாய்ப்பை தவறவிட்ட அதிமுக...

யார் இந்த சீதாலட்சுமி? 

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2024-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டுள்ளார். மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி முதுகலை பட்டதாரி ஆவார். 13 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்தவர், கேபிள் ஆப்ரேட்டராகவும், விவசாயமும்  செய்து வருகிறார். 

திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் வரும் 17-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். அதிமுக, தேமுதிக, பாஜக என அனைத்து முக்கிய கட்சிகளும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்ததையடுத்து, தற்போது இந்த தேர்தல் திமுக மற்றும் நாதக இடையிலான இருமுனை போட்டியாக மாறியுள்ளது. 

இதையும் படிங்க: வேண்டாம் புறக்கணிப்பு.. அதிமுகவுக்கு சரிவு தொடங்கிவிடும்.. அதிமுக மீது திருமா கரிசணம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share