விமான நிலையத்தில் பிரபல நடிகை கைது... உடலில் இத்தனை கிலோவா!!
பிரபல நடிகை ஒருவர் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சினிமா நடிகர், நடிகைகள் எந்த அளவுக்கு பிரபலமாகி புகழை அடைந்து வருகிறார்களோ, அதே அளவுக்கு சர்சைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சினிமா பிரபலங்கள் மீது மோசடி வழக்குகள் போடப்பட்டுள்ளன. அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மாணிக்யா என்ற கன்னட படத்தில் நடித்து பிரபலமானவர் ரன்யா. கர்நாடகாவில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் இவர். அடிக்கடி துபாய் சென்று வரும் இவர் தற்போது சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
ரன்யா துபாயில் இருந்து பெங்களூரு வந்துள்ளார். இந்நிலையில் விமான நிலையத்துக்கு தங்கம் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தினுசு தினுசாய் யோசிக்கிறாங்கப்பா.. ஏர்போர்ட்டில் சிக்கிய 1.39 கிலோ தங்கம்.. கடத்தல்காரரை மடக்கி பிடித்த அதிகாரிகள்..!
உடனே விமான நிலையத்துக்கு சென்ற அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ரன்யாவின் உடமையும் சோதனையிடப்படட்து. அதில் ரன்யாவிடம் 14.8 கிலோ தங்கம் இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரன்யாவை கைது செய்து பெங்களூருவில் உள்ள டிஆர்ஐ தலைமையகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் நடிகை தங்கம் கடத்தி வந்தது உறுதியானது.
இதையடுத்து அந்த நடிகை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். தங்கம் கடத்திய வழக்கில் நடிகை கைதான சம்பவம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பாடகி கல்பனா தூக்கி மாத்திரையை சாப்பிட்டு உயிருக்கு போராடும் நிலையில் அந்த சம்பவம் பரபரப்பானது. அதை தொடர்ந்து ரன்யாவின் கைது சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆடு மேய்க்கும் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்..!!