×
 

“காத்திருந்து...காத்திருந்து...” அண்ணாமலை சொன்னதை நம்பி பட்டாசு, ஸ்வீட் உடன் காத்திருந்து ஏமாந்த விவசாயிகள்! 

டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்த விவகாரத்தில் காலை முதலே நல்ல அறிவிப்பு வரும் என காத்திருந்து காத்திருந்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்த விவகாரத்தில் காலை முதலே நல்ல அறிவிப்பு வரும் என காத்திருந்து காத்திருந்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பழைய பல்லவியை மீண்டும் பாடியதாகவும் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க விடுக்கப்பட்ட ஏலத்தை ஒன்றிய அரசு இன்று ரத்து செய்யும் என காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் சுரங்க ஏலம் ரத்து குறித்து முழுமையாக எந்த தகவலும் கிடைக்காததால் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட தயாராக இருந்த பொது மக்களுக்கு இந்த முடிவு அதிர்ச்சியை தந்திருந்தாலும் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரிட்டாபட்டி வல்லாளபட்டி நாயக்கர்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு கடந்த 07.11 2024 அன்று ஒப்புதல் வழங்கியது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், கடந்த பத்தாம் தேதி வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு போராட்டம் நடத்தியவர்களிடையே பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இத்திட்டம் ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மூலம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்தார். 

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலையில் ஏறி கறிச்சோறு… மதக்கலவரத்தை தூண்டும் நவாஸ்கனி எம்.பி..!அண்ணாமலை ஆவேசம்..!

அதனைத் தொடர்ந்து நேற்று அப்பகுதியைச் சேர்ந்த கிராம முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு இன்று ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை மாலை சந்தித்தனர். இதனால் இந்த சுரங்க ஒப்பந்தம் ரத்தாகும் என எதிர்பார்த்து காலை முதல் அரிட்டாபட்டி மற்றும் வல்லாளப்பட்டி கிராம பகுதிகளில் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். காலை முதல் காத்திருந்த பொது மக்களுக்கு மாலையில் ரத்து அறிவிப்பு குறித்து முழுமையான தகவல் எதுவும் அறிவிக்காமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது பழைய பல்லவியை மீண்டும் பாடியதால் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட தயாராக இருந்த பொது மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் நடந்த இச்செயலால் கடும் கோபத்திற்கு உள்ளான போராட்டக்காரர்கள் அண்ணாமலை மீண்டும் பழைய பல்லவி பாடி கொண்டிருப்பதாகவும் தங்களுக்கு ஒன்றிய அரசு மூலம் இத்திட்டம் ரத்து என எழுத்து பூர்வமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே இன்று மாலை மேலூர் தனியார் திருமண மண்டபத்தில் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்த ஏல அறிவிப்பு குறித்து நாளை முறையான அறிவிப்பு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து குறித்து ஆலோசிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: “அதையும் நீங்களே சொல்லிட்டுங்கண்ணா” - திமுகவை அடுத்து விஜய்யை ரவுண்ட் கட்டும் பாஜக! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share