×
 

செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுத்த ஆர்.பி.உதயகுமார்.. அதிமுகவில் வெளிப்படையாக வெடித்த கோஷ்டி மோதல்..

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு, பரமபதத்தில் பாம்பு கொத்தினாற்போல எடப்பாடி பழனிசாமியை ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இது போதாத காலம் போல.. ஒருவழியாக இப்போது தான் கட்சி, சின்னம், பதவி ஆகியவை கிடைக்கப்பெற்று எதிர்கட்சித் தலைவர் செயல்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். ஆனால் அதற்குள்ளாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு, பரமபதத்தில் பாம்பு கொத்தினாற்போல ஆரம்பித்த இடத்திற்கே எடப்பாடி பழனிசாமியை கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. 

அதாவது அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகளை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும் இதற்கு தடைகோரிய எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுஒருபுறம் இருக்க, மறுபுறம் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பிரிவு என்ற இடத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் கொங்கு மண்டலத்தின் முக்கிய அதிமுக நிர்வாகியும், முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் எம்எல்ஏமான செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: ஓபிஎஸ் rocked..எடப்பாடி shocked..! அதிர்ச்சி தந்த நீதிமன்ற தீர்ப்பு விவரம்..!

ஏன் என அவரிடம் கேள்வி எழுப்பியபோது, விழாவில் எம்ஜிஆர் - ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறாததால் புறக்கணித்ததாக கூறினார். மேலும் நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தனக்கும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கும் இருந்த நீண்டகால நட்பினைப் பற்றி கூறினார். கிட்டத்தட்ட அதிமுகவில் தனது சீனியாரிட்டி எத்தகையது என்பதாகவே அவரது பேச்சு அமைந்திருந்தது. ஒரு இடத்தில் கூட அவர் எடப்பாடி பழனிசாமி பற்றி குறிப்பிடவில்லை. 

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக காப்பாற்றி கரை சேர்த்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கிய பின்னர் அந்த இடத்திற்கு ஆர்.பி.உதயகுமாரை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரசியல் கணக்கு தெளிவாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: பிரசாந்த் கிஷோர் - எடப்பாடி ரகசிய சந்திப்பு..! திமுகவுக்கு வேலை செய்த ஊழியர்களை மடக்கும் பிகே டீம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share