பகவத் கீதையை மட்டுமல்ல... கணபதி சிலையையும் விண்வெளிக்கு எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்...!
கடந்த மே மாதம் போயிங் ஸ்டார்லைனரில் விண்வெளிக்குச் சென்றபோது, தனது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சுனிதா வில்லியம்ஸ் பகவத் கீதையை எடுத்துச் சென்றது நாம் அனைவரும் அறிந்ததே.
கடந்த மே மாதம் போயிங் ஸ்டார்லைனரில் விண்வெளிக்குச் சென்றபோது, தனது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சுனிதா வில்லியம்ஸ் பகவத் கீதையை எடுத்துச் சென்றது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அத்துடன் மிக, மிக முக்கியமான ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய இந்திய-அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் புதன்கிழமை பூமிக்குத் திரும்ப உள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் ISS இலிருந்து வெற்றிகரமாக வெளியேறியது, வில்லியம்ஸை சக விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் பிறருடன் அழைத்துச் சென்றது.
இதையும் படிங்க: செவ்வாய் கிரக கதவை திறந்துவிட்ட சுனிதா வில்லியம்ஸ்... அவருக்கு தெரியாமல் நடந்த அற்புதம்...!
இந்திய கலாச்சாரத்துடன் ஆழமான தொடர்பு:
அமெரிக்க வாழ் இந்தியராக இருந்தாலும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த மே மாதம் போயிங் ஸ்டார்லைனரில் விண்வெளிக்குச் சென்றபோது, அவர் தனது வலுவான கலாச்சார வேர்களை பிரதிபலிக்கும் பகவத் கீதையை எடுத்துச் சென்றார்.
விண்வெளியில் விநாயகர் சிலை:
ஊடகம் ஒன்றிற்கு அவரது உறவினர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், சுனிதா வில்லியம்ஸ் ஒரு விநாயகர் சிலையையும் விண்வெளிக்கு எடுத்துச் சென்றதாகவும், அதன் புகைப்படத்தை தனக்கு ஷேர் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் அண்மையில் நடந்த மகா கும்பமேளாவில் தான் கலந்துகொண்ட புகைப்படங்களை சுனிதாவுக்கு அனுப்பியதாகவும், பதிலுக்கு, விண்வெளியில் இருந்து படம்பிடிக்கப்பட்ட மகா கும்பமேளா புகைப்படங்களை தனக்கு சுனிதா அனுப்பிவைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது முந்தைய பயணங்களில் இதுபோன்ற விஷயங்களை சுனிதா வில்லியம்ஸ் பின்பற்றியுள்ளார். இந்திய மரபுகளுடனான அவரது தொடர்பு அவரது வாழ்க்கை முழுவதும் தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் பல சந்தர்ப்பங்களில் மத மற்றும் கலாச்சார சின்னங்களை விண்வெளிக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சவால்கள் காரணமாக சுனிதா வில்லியம்ஸும் அவரது குழுவினரும் எதிர்பாராத தாமதங்களை எதிர்கொண்டதால், 9 நாட்களில் திரும்ப வேண்டியவர்கள் 9 மாதங்களாக தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது கடும் சவால்களுக்கு இடையே சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியுள்ளதை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி வருவது குறிப்பிடத்தகக்து.
இதையும் படிங்க: டால்பின்களின் வரவேற்புடன் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..!