×
 

கஞ்சா கடத்தி வர நூதன ப்ளான்.. ரயில், பஸ், கார் என திட்டமிட்ட கும்பல்.. போலீசை திணறடிக்க சதி திட்டம்..!

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்ய திட்டமிட்ட 2 இளைஞர்களை சென்னை ரெட்ஹில்ஸ் அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மது, கஞ்சா போன்ற போதை வஸ்துகளால் தான் பாலியல் குற்றங்களும்  கொலை, கொள்ளை போன்ற  சமூக விரோத சம்பவங்களும் அதிக அளவில் நடைபெறுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தவும், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்கவும் தமிழக போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஆப்ரேஷன் கஞ்சா 1.0 வில் துவங்கி ஆப்ரேஷன் கஞ்சா 4.0 வரையில் ஏராளமான அதி தீவிர நடவடிக்கைகளை தமிழக போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலும் கஞ்சா விளைச்சல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சில இளைஞர்கள் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வதும் தொடர்கிறது. அவ்வாறு கஞ்சா கடத்தி வர அவர்கள் ரயில் பயணங்களை பெருமளவு மேற்கொண்டு வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் ஒருபகுதியாக ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்ய திட்டமிட்ட 2 இளைஞர்களை தமிழக போலீசார் சென்னையில் மடக்கி பிடித்தனர். சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலிசார் ஆந்திராவில் வந்த பேருந்தை சோதனை செய்த போது இரு இளைஞர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. 

இதையும் படிங்க: கஞ்சாவுடன் பிடிபட்ட ஐஐடி பாபா... ஆன்மீகவாதியாக பிரபலம் அடைந்ததும் அட்டூழியம்..!

முன்னதாக, ஒடிசாவில் இருந்து சென்னை வழியாக கோவைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. ரகசிய தகவலையடுத்து செங்குன்றம் சோதனைச்சாவடி அருகே மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக வந்த பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.  பேருந்தில் யாரோ ஏறுகிறார்கள் என பயணிகள் அமைதியாக இருந்த போது, ஒவ்வொரு பயணிகளின் பையை போலீசார் சோதனை இட துவங்கினர். அப்போது ஒருவருடையா பையில் பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா கடத்தியவர்கள் கோவையை சேர்ந்த டேவிட்ராஜ் (வயது 26) மற்றும் சந்தீப் (வயது 23) என்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் ஓடிஷாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. ஒடிசாவில் இருந்து நேராக கோவைக்கு கஞ்சா கடத்தினால் இன்பார்மர் மூலம் செய்தி வெளியாகி மாட்டிக்கொள்வோம் என்பதால், ஆந்திர மாநிலம் வழியாக கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்துள்ளனர். பின்னர் சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மார்க்கமாக சென்னை கோயம்பேடு நோக்கி வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கோவைக்கு செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: டார்ஜிலிங், ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா.. சென்னையில் விற்பனை செய்த பெண்கள் உட்பட 7 பேர் கைது..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share