×
 

இது ஜென் பீட்டா காலம்!

ஜென் பீட்டா காலம்

மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐசோல் (Aizawl).    கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி சுமார் மாலை ஆறு மணி. சில்லென்ற காற்று.  பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த ராம்சேர்மாவி என்ற பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அன்று நள்ளிரவை கடந்து மூன்று வினாடிகள் .... அது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி விடியற்காலை சரியாக 12.03. அந்த  ஆஸ்பத்திரியின் வராண்டாவில் பதற்றத்தோடு உலாவிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் கணவர் ரெம் ரூ  சங்காவிற்கு ஒரு இனிப்பான செய்தி வருகிறது.  "உங்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது".

ராம்சேர்மாவியும் அவர் கணவரும் இந்த குழந்தைக்கு  ஃப்ராங்கி ரெமுராடிகா ஜடேங் எனப் பெயர் சூட்டியுள்ளனர். 

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

இந்தக் குழந்தைதான் இந்தியாவின் முதல் 'ஜெனரேஷன் பீட்டா' (Generation Beta) குழந்தை.
தற்போதயெல்லாம்  குறிப்பிட்ட  ஆண்டுகளுக்கு இடைப்பட்ட  காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு என ஒரு பெயர் வழங்கப்பட்டு வருகிறது அல்லவா? அந்த வகையில் தற்போது தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள 2025-ஆம் தொடங்கி  2039-ஆம் ஆண்டு முடியும் வரை  (15 ஆண்டுகள்) பிறக்கும் குழந்தைகள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர்.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் ஜென் பீட்டா குழந்தை..எங்கே பிறந்தது தெரியுமா ..?

இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் மில்லேனியல் என்று அழைக்கப்படும் ஜென் ஒய் (1981-1996) அல்லது ஜென் z (1997-2010) -யின் பிள்ளைகளாக  இருப்பார்களாம்.

ஜென் பீட்டா என்ற பெயரை முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தவர் ஆஸ்திரேலியா நாட்டு ஆய்வாளர் மார்க் மெக்ரண்டில் (Mark McCrindle) என்பவராவார். இவர்தான் உலகிற்கு ஜென் ஆல்ஃபா (Generation Alpha) என்ற பெயரையும் அறிமுகம் செய்தார்.

உலகம் கல்வி, வேலை, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு என்று எதிலும் டிஜிட்டல் மயமாகி கொண்டிருக்கும் இந்த காலத்தில் பிறக்கும் இக்குழந்தைகள்  டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்  திறனில் மிகவும் கை தேர்ந்தவர்களாக  இருப்பார்கள். மேலும் இவர்கள் உலக சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என ஆய்வாளர் மெக்ரண்டில் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார். இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் வருங்காலத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக இதில் பெரும்பாலான குழந்தைகள் 100 ஆண்டுகளை கடந்தும் வாழ்பவர்களாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவின் முதல் ஜென் பீட்டா குழந்தையைப் பெற்றெடுத்ததற்கு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று ராம்சேர்மாவியும் அவர் கணவரும் குதூகளிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிக்கிறது... அதிமுக வழியில் அண்ணாமலை அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share