6 வயது சிறுமி கொடூர கொலை.. மலையடிவாரத்தில் உடல்.. போலீஸ் வளையத்துக்குள் சிக்கிய சிறுவன்..!
மும்பையின் நாலா சோபாராவில் 6 வயது சிறுமி, கழுத்து நெறிக்கப்பட்டு, பாறையில் மோதி முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலா சோபாரா பகுதியை சேர்ந்தவர் முகமது சல்மான். இவரது மனைவி முகமது ரம்ஜான் கான். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை பள்ளியில் இருந்து தனது இரண்டு மகள்களையும் ரம்ஜான் கான் அழைத்து வந்துள்ளார். சிறுமிகள் இருவரும் வீட்டிற்கு வெளியே விளையாடி உள்ளனர். சிறுது நேரம் கழித்து ரம்ஜான் கான் வெளியில் வந்து பார்த்த போது அவரின் 6 வயது மகளான ஷித்ரா கதுன் மாயமானது தெரிந்தது. பதற்றமடைந்த ரம்ஜான் கான், வீட்டை சுற்றிலும் தேடி உள்ளார். அருகில் வசிக்கும் உறவினர்களிடமும் சென்று விசாரித்துள்ளார். யாருமே ஷித்ராவை பார்க்கவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.
பயத்தில் கணவருக்கு போன் செய்த ரம்ஜான் கான், கணவர் முகமது சல்மானிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். கணவர் சல்மானும் உடனே வீட்டிற்கு வந்து, வீட்டின் அருகில் குழந்தை வழக்கமாக விளையாடும் பகுதிகளில் தேடினார். வீட்டின் பின்னால் உள்ள மலைப்பகுதிகளிலும் தேடி உள்ளார். சல்மானுக்கு ஆதரவாக அவரது உறவினர்களும் ஷித்ராவை தேடினர். இந்நிலையில் இருட்ட ஆரம்பித்ததால் அனைவரும் பயந்து போயினர். இனியும் தாமதிக்க கூடாது என எண்ணி போலீசாரிடம் சென்று மகளை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். போலீசாரும் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசார்ணையை துவங்கினர்.
இதையும் படிங்க: திருப்பதியில் குழந்தையை கடத்திய பெண்..! ஒரே மணி நேரத்தில் சிசிடிவியை வைத்து அல்லேக்காக மடக்கிய போலீஸ்..!
அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை இட்டதில் சிறுமி கடைசியாக அவளது அத்தை மகனான 13 வயது சிறுவனுடன் சென்றது தெரிந்தது. சிறுவனை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது நானுன் ஷித்ராவும் மலை பக்கமாக சென்று விளையாடினோம். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் என்னை அடித்துவிட்டு ஷித்ராவை தூக்கி கொண்டு சென்றனர் என தெர்வித்தான். இதை வெளியில் சொன்னால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறினான். உடனே சிறுவன் சொன்ன மலைப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு சிறுமி கொலை செய்யப்பட்டு முகம் சிதைந்த நிலையில் கிடந்துள்ளார்.
சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பிரேத பர்சோதனை அறிக்கையில் சிறுமி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்ய முயற்சி செய்தது தெரிந்தது. ஆனால் சிறுமியின் கழுத்தில் இருந்த கைத்தடம், டீன் ஏஜ் வயது நபரின் கைத்தடம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறுவன் 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் கடத்தியதாக கூறிய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது இதையடுத்து சிறுவனை போலீசார் தங்களது பாணியில் விசாரிக்க துவங்கினர். அப்போது சிறுவன் அனைத்து உண்மைகளையும் கக்க துவங்கினான்.
சிறுவன் குடும்பத்தில் அனைவரும் அவன் மீது பாசமாக இருந்ததாகவும், சிறுமி ஷித்ரா கதுன் பிறந்த பிறகு அனைவரும் அவள்மீதே பாசம் காட்ட துவங்கியதால் தான் தனிமையாக உணர்ந்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். அப்போது டிவியில் இந்தி சைக்கோ திரில்லர் திரைப்படமான ராகன் ராகவ் திரைப்படத்தை பார்த்த சிறுவன், அதனால் ஈர்க்கப்பட்டு சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டு அதை நிறைவேற்றியும் உள்ளான். போலீசார் கேள்வி கேட்கையில் சந்தேகம் ஏற்படாதவாறு பொய் சொல்லி சமாளிக்கும் அளவிற்கு சினிமா பார்த்து கெட்டுள்ளான் சிறுவன். இதையடுத்து சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கைதானவர் என் மகளின் ஆண் நண்பர் இல்லை..! ராகுலுடன் போஸ் கொடுத்த பெண்ணின் தாயார் பேட்டி..!