×
 

தேர்விற்கு ஆம்புலன்சில் வந்து இறங்கிய மாணவி.. கல்வியை கைவிடாத மாணவிக்கு குவியும் பாராட்டு! 

நீலகிரி அருகே எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இன்று பதினோராம் வகுப்பு தேர்வு எழுத சென்ற காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

என்ன ஆனாலும் கல்வியை கைவிடக்கூடாது என வைராக்கியமாக இருந்து இன்று தேர்வையும் தைரியத்துடன் சந்தித்திருக்கிறார் மாணவி ஜாஸ்மின். அறிஞர்கள் உணர்த்திய கல்வி ருசியை உணர்ந்த ஜாஸ்மின் பல்வேறு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கி வருகிறார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாட்டாவாயல் பகுதியை சேர்ந்தவர் சைனுதின். கூலி தொழிலாளி ஆன இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். துரதஷ்டவசமாக இரு குழந்தைகளும் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு எழுந்து நடமாட முடியாத நிலையில் படுக்கையிலேயே அவர்களின் மொத்த வாழ்வையும் கழித்து வருகின்றனர்.

நாள் முழுவதும் அத்தியாவசிய தேவைக்கு கூட கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இவர்களின் தேவைகளையும், வேண்டல்களையும் அவர்களின் தாய் மற்றும் தந்தையரே இணைந்து செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடங்கியது ப்ளஸ் 1 பொதுத்தேர்வு... 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்..!

இந்த நிலையில் அவர்களின் இரண்டாவது மகளான ஜாஸ்மின், தாய் மற்றும் தந்தையரின் உதவியோடு பிதர் காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். தமிழகம் முழுவதும் இன்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு துவங்கியுள்ளது.

இந்நிலையில் பொது தேர்வை எழுத விரும்பிய மாணவி ஜாஸ்மின், ஆம்புலன்ஸ் மூலமாக தேர்வு கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து மாணவியை தேர்வு அறைக்கு ஸ்ட்ரக்சர் மூலம் அழைத்துச் சென்றனர். 

பின்னர் தேர்வறையில் மாணவி ஜாஸ்மின் உதவியாளர் மூலம் தேர்வு எழுதி வருகிறார். உடல் முழுவதும் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் பொது தேர்வு எழுதிய மாணவி ஜாஸ்மினை ஆசிரியர்கள் மட்டும் இன்றி காண்போர் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: பார்வைத்திறன் குறைபாடு +2 மாணவர்கள்... கணினி வழியில் தேர்வு எழுத நடவடிக்கை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share