அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பால் உலக வர்த்தகம் 3% சுருங்கும்.. ஐநா பொருளாதார வல்லுநர் எச்சரிக்கை..!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பால் உலக வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்கும் என்று ஐ.நா. பொருளாதார வல்லுநர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பால் உலக வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்கும் என்று ஐ.நா. பொருளாதார வல்லுநர் எச்சரித்துள்ளார். அதேநேரம் ஏற்றுமதிகள் அமெரிக்கா, சீனாவிலிருந்து இந்தியா, கனடா,பிரேசில் பக்கம் திரும்பும் என்றும் பொருளாதார வல்லுநர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பரஸ்பர வரித்திட்டத்தை அறிமுகம் செய்தார். இதில் அமெரிக்க பொருட்களுக்கு அதிகமாக வரிவிதிக்கும் நாடுகளுக்கு அமெரிக்காவும் அதிக வரிவித்தது.
இதையும் படிங்க: அமெரிக்கா வரி போர் அச்சுறுத்தலை சமாளிக்க கொள்கை தேவை.. ப.சிதம்பரம் வலியுறுத்தல்..!
இந்நிலையில் பரஸ்பர வரித்திட்டத்தை90 நாட்களுக்கு அதிபர்ட்ரம்ப் நிறுத்தி வைத்தார். ஆனால், சீனா மீது விதிக்கப்பட்ட 154 சதவீத வரிவிதிப்பை மட்டும் அவர் நிறுத்தவில்லை. சீனாவும் அமெரிக்கா மீது பதிலடியாக 125 சதவீத வரிவிதித்தது.
இந்நிலையில் ஜெனிவாவில் சர்வதேச வர்த்தக மையத்தின் நிர்வாக இயக்குநர் பமீலா கோக் ஹேமில்டன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரியால் உலக வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்கும். குறிப்பாக மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் லத்தின் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி பாதிக்கப்படும். ஆனால், கனடா, பிரேசில், இந்தியா ஓரளவு பயன் பெறும்
வியட்நாமில் இருந்து ஏற்றுமதிகள் அமெரிக்கா, மெக்சிகோ, சீனாவுக்கு செல்வதற்குப் பதிலாக மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா சந்தைக்கு செல்லும். வளர்ந்து வரும் நாடுகளில் ஜவுளித்துறை சிறப்பான வேலை வாய்ப்பையும் வருவாயாயைும் வழங்கி வருகிறது.
வங்கதேசம் உலகளவில் 2வது மிகப்பெரிய ஆயத்த ஆடை ஏற்றுமதி நாடாகஇருக்கும் நிலையில் பரஸ்பர வரிவிதிப்பால் 37 சதவீதம் வரியை தாங்க வேண்டியதிருக்கும். இதனால் ஆண்டுக்கு 330 கோடி டாலரை வங்கதேசம் இழக்க நேரிடும்.
அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பால் மெக்சிகோ, சீனா, தாய்லாந்து நாடுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் கடுமையாக பாதிக்கும், அமெரிக்கா அதிகமாக பாதிக்கப்படும்.
இவ்வாறு கோக் ஹேமில்டன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 145% வரிவிதிப்பில் சிக்கிய சீனா.. கூடுதல் வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொக்கரிப்பு..!