கள்ளக்குறிச்சி விஷ சாராயவழக்கு குற்றவாளிகள்... ஜாமின் மனுக்கள் தள்ளுபடி- உயர்நீதிமன்றம் ..
கள்ளக்குறிச்சி விஷ சாராயவழக்கு குற்றவாளிகள்... ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி மட்டும் தாமோதரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி விஷ சாராயம் அருந்தி சுமார் 67 பேர் மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் விஷ சாராயம் விற்பனை செய்த 21 பேர் கைது செய்யபட்டு, சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்தது.
பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றி சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையும் படிங்க: சென்னை பல்கலை. HOD நியமனத்திற்கான புதிய விதிகள் செல்லும்.... தகுதிக்கே முன்னுரிமை என நீதிமன்றம் தீர்ப்பு ...
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக சேர்க்க்பட்ட கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, பரமசிவம் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், கன்னுக்குட்டி, தாமோதரன், விஜயா பரமசிவன் ஆகியோர் கடந்த 8 மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி, கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன் ஆகியோர் மீது கள்ளச் சாராயம் கடத்தியதாக ஏற்கனவே 13 வழக்குகள் உள்ளதாகவும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
சிபிஐ வாதத்தை ஏற்ற நீதிபதி, கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன் ஆகிய இருவருக்கும் தற்போது நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதே வேளையில் பரமசிவம், விஜயா ஆகிய இருவருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி சுந்தர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சொத்து வாங்கியதை மறைத்த நீதிபதி..! கட்டாய ஓய்வு வழங்கியது செல்லும் - உயர்நீதிமன்றம்..!