தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழில் மிகப்பெரிய மோசடி : உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி..!
தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் ஒரு பெரிய பெரிய பிரச்சனையாகத் தெரிகிறது.
தமிழகத்தில் போலி சாதிச் சான்றிதழ்களை வழங்குவதில் "பெரிய மோசடி" இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்க்காட்டி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இந்து கொண்டா ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சான்றளிக்கும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் போது நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது.
"தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் ஒரு பெரிய பெரிய பிரச்சனையாகத் தெரிகிறது. பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்து கொண்டா ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சான்றளிக்கும் ஆயிரக்கணக்கான இதுபோன்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. தற்போதைக்கு, நாங்கள் எந்த குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை. ஆனால் முதல் பார்வையில் இது ஒரு பெரிய மோசடியாகத் தெரிகிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பலரை பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகக் குறிப்பிட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்ட மனுக்களை விசாரித்து வந்தது. இந்த விஷயங்களை நீதிமன்றம் முடிவு செய்யும் வகையில், சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை விசாரித்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் மாநில அளவிலான ஆய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: உச்சநீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது… வாய்ப்பே இல்லை… சீமான் தடாலடி..!
இவ்த வழக்கின் பிரதிவாதியான ஒருவர், தான் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், எனவே, தனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரினார். இருப்பினும், வட்டாச்சியர் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு அது நிராகரிக்கப்பட்டது.
தனது மகனுக்கு சமூகச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற பிரதிவாதியின் மனுவை அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், குடும்பம் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்ததா? இல்லையா? என்பதை மாநில அளவிலான ஆய்வுக் குழு தீர்மானிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அரசு ஒரு சிறப்பு மபு ஒன்றை தாக்கல் செய்து, கடந்த ஆண்டு இடைக்கால உத்தரவாக தடை விதித்தது.
கடந்த வாரம், சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விவரங்களை சரிபார்க்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவை மாற்றியமைத்தது. இந்த விஷயங்களில் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விவரங்கள் குறித்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அளவிலான ஆய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், நீதிமன்றம் ஒவ்வொரு மனுவையும் சுயாதீனமாக ஆராய்ந்து தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யும்.
இந்தச் சான்றிதழ்கள் உண்மையானவையா? இல்லையா? என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களால் இத்தகைய சாதிச் சான்றிதழ்கள் எந்த முறையில் வாங்கப்பட்டுள்ளன என்பதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்" என்று நீதிமன்றம் கூறியது.
குழு நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: சீமானுக்கு பெரிய ரிலீஃப்..! இடைக்கால தடைவிதித்தது உச்சநீதிமன்றம்.. விரிவான தகவல்கள்