×
 

‘அண்ணாமலையை நீக்கினால் தமிழக பாஜகவுக்கு பரலோகம்தான்..!’அதிர்ச்சி கிளப்பும் ஆதரவாளர்கள்..!

அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்று சிலர் கிளப்பி வருகின்றனர். மாற்றுக் கட்சி சேர்ந்தவர்களும் அண்ணாமலை மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

'அண்ணன் எப்ப நகர்வான்; திண்ணை எப்போ காலியாகும்...’என்கிற பழமொழிக்கு தற்போது பாஜகவில் உள்ள சில நிர்வாகிகளுக்கு நிச்சயம் பொறுந்தும். கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்று சிலர் கிளப்பி வருகின்றனர். மாற்றுக் கட்சி சேர்ந்தவர்களும்  அண்ணாமலை மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். 

இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தளப்பதிவில் ‘‘தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சியை தான் தலைமையேற்றதிலிருந்து இன்று வரை நிலைப்பாடு செய்து அதனுடைய வளர்ச்சிக்கு தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் அண்ணாமலையைக் குறித்து தேவையில்லாத புகார்களைக் கிளப்பிக்கொண்டு பா.ஜ. கட்சியினரே டெல்லி வரை சென்று முறையிடுகிறார்கள். 

அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் இந்த முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இளம் ஐபிஎஸ் அதிகாரி தன் பணியை ராஜினாமா செய்து விட்டு வந்து இந்த பொறுப்பை தலையில் சுமந்து இருக்கிறார் என்றால் அவருக்கு எல்லா வகையிலும் ஒத்துழைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பது தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சிக்கு நன்மையாக முடியாது! இது என்னை போன்ற சிலருக்கு பொது வெளியில் தெரியும்’’ என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்.. கைதான சௌமியா.. கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..

 இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘‘கூட்டணி ஒன்றே வழி. இல்லையென்றால் இடைத்தேர்தலை புறக்கணிப்பது போல 2026ஐ ஏதாவது காரணம் சொல்லி புறக்கணித்து விடலாம். அண்ணாமலை அவரசப்படாமல் 2034/39 வரை கட்சி தலைவராக இருக்கும் பொறுமையை வளர்த்துக் கொள்வது அவசியம். 

அண்ணாமலை பாஜகவை தாங்கி பிடிக்கும் ஒரு பலமான தூண். அவர் தான் தமிழக பாஜகவின் பிடிமானம். அப்படி இருக்க உள்ளேயும் வெளியேயும் என்ன ஒரு காழ்புணர்ச்சி, இவர்களுக்கு ஏன் இந்த வீண் நப்பாசை. திமுக நம் ஒரே எதிரி. அதைவிடுத்து, அண்ணாமலைக்கு ஆதரவு என்ற பெயரில், மற்ற மூத்த தலைவர்களை சமூகவலைதளங்களில் இழிவுபடுத்துபவர்கள் கண்டிப்பாக நம் ஆதரவாளர்கள் அல்ல.
இவர்கள் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் உலாவும் பொய்க்கால் குதிரைகள். அண்ணாமலை கோபுரம். கோபுரத்தை பொம்மைகள் தாங்குவதில்லை.

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை அண்ணன்  மாற்றப்படுகிறார் என்று அனைவராலும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது மாற்றுக் கட்சி சேர்ந்தவர்களும் அண்ணாமலை மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால். அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவை வளர்க்க நினைக்கிறார். அவர் பதவி ஆசை கொண்டு யாருடன் கூட்டணி வைத்து பதவி சுகம் அனுபவிக்க நினைக்கவில்லை.’’ என்கிறார்கள். 

இதையும் படிங்க: அண்ணா பல்கலை விவகாரம்; அதிரடி காட்டும் அண்ணாமலை... மதுரை To சென்னை மகளிர் பேரணி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share