×
 

38 வருட காத்திருப்பு... அண்ணாமலையால் செய்ய முடியுமா?

தமிழ்நாட்டில் பாஜக ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதலில் கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொங்கல்நகரம் பகுதியில் தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கள் விடுதலை கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்னை, பனை மரங்களில் வரக்கூடிய எல்லா பொருட்களும் உணவு பொருட்களாக பார்க்க வேண்டும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி தெள்ள தெளிவாக உள்ளது.

வருகின்ற 2026ல் தமிழக மக்கள் வாய்ப்பு கொடுத்து பாஜக கூடணி ஆட்சி அமைக்கும்போது தமிழகத்தில் கள் இறக்குவதற்கான அனுமதியை நிச்சயம் பெற்று தருவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் விவசாய பெருமக்கள் துணை நிற்க வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் கடந்த 1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அனைத்துக் கட்சிக் கூட்டம்... பாஜக ஏன் வரணும்.? விரிவாக விளக்கிய கனிமொழி.!

சுமார் 38 ஆண்டுகள் போதை ஏற்படுத்தும் என்ற கருத்தால் அதை இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. கள் இயக்கம் சார்பில் கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி வழங்கப்படும் என்றும் பரிசு அறிவிக்கப்பட்டது. 

‘தொடர்ந்து தமிழகத்தில் கள் இறக்குவதற்கான ஆதரவு குரல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என அண்ணாமலை பேசி இருப்பது கவனம் செலுத்துகிறது ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவில் கேள்விக்குறியாகும் எடப்பாடி தலைமை?... கொங்கு மண்டலத்தையே திரும்பி பார்க்க வைத்த அண்ணாமலை...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share