×
 

அவுரங்கசீப் சமாதியை இடித்து அகற்றினால் ரூ.21 லட்சம் பரிசு.. கிருஷ்ணஜென்ம பூமி தலைவர் அறிவிப்பால் பரபரப்பு.!

மகாராஷ்டிராவில்  முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் சமாதியை இடித்து அகற்றுபவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சங்கர்ஷ் நியாஸ் அமைப்பின் தலைவர் தினேஷ் பல்ஹரி அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

மகாராஷ்ர மாநிலம் சம்பாஜி நகர் மாவட்டத்தில் முகலாய மன்னர் அவரங்கசீப் சமாதி உள்ளது. இந்தச் சமாதியை அகற்ற வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு இரு நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் வீடு, வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.  இதேபோல பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டன.

மேலும் சில இடங்களில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். எனவே சம்பாஜி நகர், நாக்பூர் ஆகிய மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே, இங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்புக்கு  ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின்  வலதுசாரி ஆதரவாளரும், ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி அமைப்பின் தலைவருமான தினேஷ் பல்ஹரி வீடியோ மூலம் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில்,"முகலாய மன்னர் அவுரங்கசீப் இந்து கோயில்களை இடித்தவர். இந்து பெண்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டவர். மராட்டியத்தில் வீரர்களுக்கு எதிராக கொடுங்குற்றங்களை இழைத்தவர். இவை அனைத்தையும் அண்மையில் ஒரு திரைப்படத்தில் பார்த்து நான் கண்கலங்கி விட்டேன்.

இதையும் படிங்க: #BIGBREAKING: நாக்பூரில் வெடித்த பெரும் வன்முறை; தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள்; போலீசார் குவிப்பு



அப்படிப்பட்ட அவுரங்கசீப்பின் சமாதி இந்தியாவில் எந்த நோக்கத்திற்காக உதவுகிறது? அவருடைய சமாதி புல்டோசர் கொண்டு அகற்றப்பட வேண்டும். இதில் நான் உறுதியாக உள்ளேன். அவுரங்கசீப்பின் சமாதிக்கு இந்தியாவில் எங்கும் இடமில்லை. அவருடைய சமாதியை இடித்து அகற்றுபவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமி சங்கர்ஷ் நியாஸ் சார்பில் ரூ.21 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்தியாவில் அவரது சமாதியை வேறு எங்கும் வைக்க அனுமதிக்க மாட்டோம்." என்று தினேஷ் பல்ஹரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மணிப்பூராக மாறும் நாக்பூர்.. எதிர்க்கட்சிகள் சாடல்..! வன்முறைக்கு காரணமே திரைப்படம்.. மகாராஷ்டிரா முதல்வர் புதிய விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share