சீட் வேணும் என்றால் விஜய் கட்சிக்கு செல்லுங்கள்... நானே சேர்த்து விடுகிறேன் - சீமானின் பரபரப்பு ஆடியோ...!
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் நாதகவினர் விஜய் கட்சிக்கு சென்றுவிடுங்கள்.
நாதகவின் ஆலோசனை கூட்டம், சீமான் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் வருகிற மே-18ம் தேதி கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தமிழர்களின் பேரெழுச்சி பொதுக்கூட்டம் முன்னேற்பாடுகளுக்கான கலந்தாலோசனை கூட்டத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகளை அழைத்து பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், “2026 தேர்தலுக்கு நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் நாதகவினர் விஜய் கட்சிக்கு சென்றுவிடுங்கள். விஜய் கட்சிக்கு செல்வதாக இருந்தால் கூறுங்கள், நானே சேர்த்து விடுகிறேன். நாதகவில் இருந்து வருபவர்களுக்கு தம்பி விஜய்கூட தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பார்.
வென்றால் மாலை இல்லை என்றால் பாடை ; நான் சொல்பவன் தான் நாதக வேட்பாளர். நாதகவிலிருந்து கேட்டால் மு.க.ஸ்டாலின்கூட சீட் கொடுத்து விடுவார். தேர்தலில் சீட் பெற்றவர்கள் வெற்றி பெற்ற பிறகே தொகுதியில் ருந்து வெளியே வரவேண்டும். சட்டமன்றத் தேர்தலில் வெல்பவர்களை பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன்.
சட்டமன்றத் தேர்தலில் தோற்பவர்களை பாடையில் ற்றி மாலை போட்டு அனுப்பி வைப்பேன். எப்படி இருந்தாலும் மாலை உறுதி. தோற்று விட்டால் சிறிது பால்டாயிலை குடித்து விட்டு நீங்களே பாடையில் படுத்து விடுங்கள். நாதக பிளக்ஸ், பேனரில் தொண்டர்கள், நிர்வாகிகள் நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும். நாதக பேனரில் தறுதலைகள் போல தலையை விதவிதமாக அலங்காரம் செய்துொண்டு ஃபோட்டோ வைக்கக்கூடாது" என பேசியுள்ளார். இது தொடர்பான ஆடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திருமாவை விடுங்க.. என் எதிரியை நான் கருவில் இருக்கும்போதே தீர்மானித்து விட்டேன்- சீமான் திட்டவட்டம்..!