×
 

கேம்ப் ஃபயரில் எரிந்த உடல்... எடுக்க எடுக்க வந்த உடல் பாகங்கள்... கொடைக்கானலில் கொடூரம்!!

மதுபோதையில் 5 பேர் சேர்ந்து ஒருவரை கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ். சிவராஜ் பல மாதங்களாக மது போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் மதுரையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிய சிவராஜிற்கு, மறுவாழ்வு மையத்தில் மணிகண்டன், அருண், ஜோசப், சந்தோஷ், நாகசரத் ஆகிய 5 பேருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அவர் சிகிச்சை பெற்று வந்த மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்கள். இவர்களுடன் சேர்ந்து சிவரா மது குடித்து வந்ததாஜ் மீண்டும் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு வழக்கம் போல் ஒருநாள் இவர்கள் அனைவரும் ஒன்றாக மது குடித்த போது பொதை அதிகமாகியுள்ளது. அப்போது சிவராஜிற்கும் மற்ற 5 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிவராஜை சரமாரியாக தாக்கி மதுபாட்டிலால் சிவராஜை குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிவராஜை அவர்கள் தங்கி இருந்த கேம்பயரில் வைத்து எரித்துள்ளனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் சிவராஜின் உடலை பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளனர்.

இதையும் படிங்க: குலைநடுங்க வைக்கும் பட்டியல் … 28 நாட்களில் 42 கொலைகள்… சுடுகாடாகும் தமிழ் நாடு..!

ஒருபுறம் சிவராஜ் 5 பேரால் கொலை செய்யப்பட்ட நிலையில் மறுபுறம் சிவராஜின் உறவினர்கள் அவரை காணவில்லை என தேடியுள்ளனர். மேலும் இதுக்குறித்து குறித்து அளித்த புகாரின்படி கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே 5 பேரில் ஒருவரான மணிகண்டன் நடந்த சம்பவங்களை மறுவாழ்வு மைய நிர்வாகியிடம் கூறியுள்ளார். இதனை மதுரை போலீசிடம் நிர்வாகி கூறியதை அடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து கொடைக்கானல் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் அனைவருக்கும் தெரியவந்தது.  அதன்பேரில் மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த விடுதியின் கேம்ப் ஃபயரில் இருந்து எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் விடுதி வளாகத்தை சுற்றி சோதனை செய்யும் போது எரிந்த நிலையில் ஆண் தலை மற்றும் மார்பு பகுதி மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து மீட்கப்பட்ட உடல் பாகங்களை மீட்ட போலீசார், அவற்றை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆபாச புகைப்படங்களில் மனைவி... அதிர்ச்சியில் உறைந்த கணவன்... இறுதியில் டிவிஸ்ட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share