ராணுவத்துக்கு 9 மடங்கு அதிகம் செலவிடும் இந்தியா.. பாக்.-ஐ எச்சரித்த ஸ்வீடன் நிறுவனம்..!
பாகிஸ்தான் ராணுவத்துக்காக செலவிடும் தொகையைவிட 9 மடங்கு அதிகமாக இந்தியா தனது ராணுவத்துக்காக செலவிடுகிறது என்று ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்துக்காக செலவிடும் தொகையைவிட 9 மடங்கு அதிகமாக இந்தியா தனது ராணுவத்துக்காக செலவிடுகிறது என்று ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தெரிவித்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) “2024ல் உலக ராணுவ செலவுகளின் போக்கு” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. 3 முறை அல்லாஹூ அக்பர்.. ஜிப்லைன் ஆபரேட்டர் மீது வலுக்கும் சந்தேகம்..!
உலகளவில் ராணுவத்துக்குாக செலவிடும் நாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனிக்கு அடுத்தார் போல் 5வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்த 5 நாடுகளுமே உலகளவில் ராணுவத்துக்கு செலவிடும் நாடுகளின் தொகையில் 60% வைத்துள்ளனர். இந்த 5 நாடுகளும் சேர்ந்து ஆண்டுக்கு 1,63,500 கோடி டாலர்கள் செலவிடுகிறார்கள்.
பாகிஸ்தான் தனது ராணுவத்துக்காக 1002 கோடி டாலர்கள் செலவிடும் நிலையில் இந்தியாவின் ராணுவத்துக்கான செலவு 1.6 சதவீதம் அதிகரித்து 8610 கோடி டாலர்கள் செலவிடுகிறது. ஏறக்குறைய பாகிஸ்தான் செலவிடும் தொகையைவிட 9 மடங்கு அதிகமாக இந்தியா தனது ராணுவத்துக்காக செலவிடுகிறது.
சீனாவின் ராணுவ செலவு 7% அதிகரித்து 31400 கோடிடாலராக இருக்கிறது, தொடர்ந்து 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கான பட்ஜெட்டை சீனா அதிகரித்து வருகிறது. ஆசியாவில் உள்ள நாடுகள் ராணுவத்துக்காக செலவிடும் தொகையில் 50 சதவீதம் தொகையை சீனா தனது ராணுவத்துக்காக செலவிடுகிறது. அது மட்டுமல்லாமல் ராணுவத்தை தொடர்ந்து நவீனப்படுத்தியும், விரிவுபடுத்தியும் சீனா முயன்று வருகிறது. ராணுவத்தில் புதிதாக சைபர்பிரிவு தாக்குதல்படை, அணு ஆயுதப்படை ஆகியவற்றையும் சீனா புதிதாக உருவாக்கியுள்ளது.
ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்துக்கான செலவு என்பது 17% அதிகரித்து 69300 கோடி டாலர்களாக உள்ளது. உக்ரைனுடன் ரஷ்யா போர் புரிந்து வருவதால் அந்தப் பிராந்தியத்தில் ராணுவத்துக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவின் ராணுவத்துக்கான செலவு பனிப்போர் காலக்கட்டத்தைவிட அதிகரித்து வருகிறது.
2024ல் ரஷ்யாவின் ராணுவச் செலவு 14900 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கிட்டோம் அது 2023 ஆண்டு ராணுவச் செலவைவிட 38 சதவீதம் அதிகரித்துள்ளது, 2015ம் ஆண்டு செலவைவிட இரு மடங்காகியுள்ளது. ரஷ்யாவின் ஜிடிபியில் 7.1% அதாவது அரசின் செலவினத்தில் 19% ராணுவத்துக்காக செலவிடப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் ராணுவச் செலவு 2.9% அதிகரித்து 6470 கோடி டாலர்களாக அதிகரித்துள்ளது. இது ரஷ்யாவின் செலவில் 43% ஆகும்.
ஜெர்மனியின் ராணுவ செலவினம் 28% அதிகரித்து 88500 கோடி டாலர்களாக அதிகரித்துள்ளது. மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் ராணுவத்துக்காக அதிகமாக செலவிடும் நாடுகளில் ஜெர்மனி முதலிடத்திலும், உலகளவில் 4வது இடத்திலும் உள்ளது. போலந்தின் ராணுவச் செலவு 31% அதிகரித்து 3800 கோடி டாலராகவும், தனது தேசத்தின் ஜிடிபியில் 4.2% ராணுவத்துக்காக செலவிடுகிறது” எனத் தெரிவித்துள்ளது.
மூத்த ஆய்வாளர் டியாகோ லோன்ஸ் டி சில்வா கூறுகையில் “ ரஷ்யா மீண்டும் தனது ராணுவத்துக்கான செலவை அதிகரித்து உக்ரைனுக்கும் தனக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க விரும்புகிறது. உக்ரைன் அரசு தற்போது வரியின் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும் ராணுவத்துக்காகவே ஒதுக்குகிறது. இந்த கடினமான நிதிச் சூழலிலும் உக்ரைன் தனது ராணுவத்துக்காக தொடர்ந்து செலவிட்டு வருகிறது.
மத்திய ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் தங்கள் ராணுவத்துக்கான செலவுகளை தொடர்ந்து அதிகரித்துள்ளன, புதிய தொழில்நுட்பங்கள், தளவாடக் கொள்முதலையும் அதிகப்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தயார் நிலையில் கடற்படை..! இந்த முறை சாவு மணி நிச்சயம்..!