பிரதமர் மோடியின் பேச்சு என்னாச்சு..! பாகிஸ்தான் தேசிய தினத்தை புறக்கணித்த இந்திய அதிகாரிகள்..!
பாகிஸ்தானுடன் அமைதியை விரும்பித்தான் இந்தியா ஒவ்வொரு முயற்சியும் எடுக்கிறது என்று பிரதமர் மோடி பேசிய நிலையில் பாகிஸ்தான் தேசிய தினத்தில் பங்கேற்காமல் இந்திய அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.
பாகிஸ்தானுடன் அமைதியை விரும்பித்தான் இந்தியா ஒவ்வொரு முயற்சியும் எடுக்கிறது ஆனால், துரோகமும் வெறுப்பும்தான் கிடைக்கிறது என்று பிரதமர் மோடி ஒரு பாட்காஸ்ட் நேர்கானலில் பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் பேச்சையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவு விவகார அதிகாரி சாத் அகமது வாரியாச் கூறுகையில் “பரஸ்பர புரிதல், கவலைக்குரிய விஷயங்கள் பகிர்ந்து புரிதல், நீண்டகாலமாக இருக்கும் பிரச்சினைகளைதீர்ப்பதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் உறவில் புதிய உதயம் ஏற்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை இரவு நடந்தபோது, அதில் ஒரு இந்திய அதிகாரிகள் கூட பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் தரப்பில் அழைப்பு இருந்ததா எனத் தெரியவில்லை. பாகிஸ்தானுடன் வழக்கமான அண்டை நாடு என்றரீதியில் நட்புறவை தொடர இந்தியா விரும்புகிறது ஆனால், அதற்கு பாகிஸ்தான் தீவிரவாதம் இல்லாத சூழலையும்,விரோதம் பாராடத நிலையையும் ஏற்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: எல்லாம் போச்சு… இந்தியாவிடம் கெஞ்சும் பரிதாப நிலையில் பாகிஸ்தான்..!
பாகிஸ்தான் வெளியுறவு விவகார அதிகாரி சாத் அகமது வாரியாச் கூறுகையில் “ பரஸ்பர மரியாதை, அமைதியான சூழல், இறையான்மை சமத்துவம் ஆகிய அடிப்படையில் மற்ற நாடுகளுடன் பாகிஸ்தான் நட்புறவோடுதான் இருந்து வருகிறது. இந்த மேம்பட்டம் அணுகுமுறை, இந்தியாவுடன் அமைதியான உறவைத் தேட எங்களுக்கு வழிகாட்டுகிறது. தெற்காசியா – நமக்கெல்லாம் தாயகமாக இருக்கிறது, இங்கு நிலையான அமைதி, சம பாதுகாப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்புடன் முன்னேற வேண்டும்.
பரஸ்பர புரிதலை மேம்படுத்துதல், பகிரப்பட்ட கவலைகளை பேசித் தீர்த்தல் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக நீடிக்கும் சிக்கல்களை தீர்ப்பதன் மூலம் பாகிஸ்தான்-இந்தியா உறவுகளில் ஒரு புதிய விடியல் உருவாகும்” எனத் தெரிவித்தார்.
புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ராணுவ விமானங்களைக் கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை அழித்தது.
இந்த சம்பவத்துக்குப்பின் இந்தியா, பாகிஸ்தான் உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து இரு நாடுகளின் உறவும் மேலும் மோசமடைந்தது. இந்தியாவுடன் பாகிஸ்தான் கொண்டிருந்த தூதரக உறவும் மிகவும் மோசமடைந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை குறித்து எந்த அறிகுறியும் இல்லை.
கடைசியாக 2023ம் ஆண்டில் மே மாதம் கோவாவில் நடந்த எஸ்சிஓ நாடுகள் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி பங்கேற்றார். கடந்த ஆண்டு அக்டோபரில் எஸ்சிஓ மாநாட்டுக்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இஸ்லாமாபாத் சென்று பங்கேற்றார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் -சீனாவால் ஏற்பட்ட அந்த திமிர் எங்கே..? இந்தியாவின் கால்பிடிக்க இறங்கி வந்த வங்கதேசம்..!