×
 

‘ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்’: ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!

ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் என்று ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, இருக்கிறது, இருக்கப் போகிறது. சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியைவிட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று ஐ.நா.வில் பாகிஸ்தானை கடுமையாக எச்சரிக்கை செய்தது இந்தியா.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் பர்வதனேனி ஹரிஸ் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:

இதையும் படிங்க: காஷ்மீர் பற்றிய பாக். நிலைப்பாட்டை ஏற்கவே முடியாது! இந்தியா திட்டவட்டம்..!

இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்துவது குறித்து முக்கிய விவாதங்கள் நடந்து வரும்போது அதை மடைமாற்றும் வகையில் பாகிஸ்தான் பேசுகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி தேவையற்ற கருத்துக்களைத் மீண்டும் தெரிவித்திருப்பதை இந்தியா கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுபோன்ற தொடர்ச்சியான பாகிஸ்தானின் பேச்சுகள், அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளையோ அல்லது எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களையோ நியாயப்படுத்த முடியாது.

ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வருகிறது, அந்த இடத்திலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இந்தியா எந்தக் காரணத்தைக் கொண்டு இறையாண்மை உலக அரங்கில் கேள்விக் குறியாவதை அனுமதிக்காது.

இந்த சபையில் கவனத்தை வேறு ஏதாவது கருத்துக்களைக் கூறி கவனத்தை திசைதிருப்ப வேண்டாம் என்று பாகிஸ்தானைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவைப் பொருத்தவரை எங்களின் நிலைப்பாட்டையும், பதிலையும் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இந்தியா இதற்கு மேல் தங்களின் உரிமையைப் பயன்படுத்தி பதில் அளிப்பதைத் தவிர்க்கிறது. 

அமைதி காக்கும் பணியில் சீர்திருத்தங்கள் குறித்து ஐ.நா. கவனம் செலுத்தியிருந்தாலும், ஆயுதக் குழுக்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நவீன ஆயுதங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு ஏற்ப பணிகளை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியது.

சமீபத்தில் இந்தியா முதல் பெண்கள் அமைதிப்பேச்சாளர்கள் மாநாட்டை நடத்தியது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பெண்கள் குறிப்பிடத்தக்க  பங்கு வகிக்கிறார்கள். பெண்கள் அமைதிப்பேச்சில் ஈடுபட வேண்டுமா என்ற கருத்து நீண்டகாலமாக இருக்கிறது, பெண்கள் இல்லாமல் அமைதி காக்கும் பணி செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி.

ஐ.நா. அமைதி பணியில் இந்தியா சார்பில் உறுதியான இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்தியத் தூதர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரம்ஜான் மாதத்தில் இப்படியா..? ஆபாச ஃபேஷன் ஷோ: கொந்தளிக்கும் மக்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share