3 கோடி டன் பால் உற்பத்திக்கு இலக்கு.. உலகிலேயே இந்தியாவை முதல் நாடாக்க மத்திய அரசு உறுதி..!
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி டன்னுக்கு பால் உற்பத்தியை அதிகப்படுத்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
இந்தியா ஆண்டுக்கு 2.39 கோடி டன் பால் உற்பத்தி செய்து வரும் நிலையில், உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியாவை முதல் நாடாக்கவும், அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி டன்னுக்கு பால் உற்பத்தியை அதிகப்படுத்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் மக்களவையில் இன்று பேசுகையில் “உலகளவில் இந்தியா தற்போது 2.39 கோடி டன் பால் உற்பத்தி செய்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பால் உற்பத்தியை 3 கோடி டன்னுக்கு உயர்த்த மத்தியஅரசு இலக்கு வைத்துள்ளது. பிரதமர் மோடியால் 2014ம் ஆண்டு ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம் தொடங்கப்பட்டது, இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி 63.5% உயர்ந்துள்ளது. 2028ம் ஆண்டுக்குள் இன்னும் கூடுதலாக 15 % உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: அங்கன்வாடியில் 16,000 காலி பணியிடங்கள் ஒரே மாதத்தில் நியமிக்கப்படும்.. அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு..!
நாட்டில் 10 கோடி மக்கள் குறிப்பாக 75 சதவீதம் பெண்கள் மாடுவளர்ப்புத் தொழிலிலும், பால் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளனர். தினசரி ஒருவர் 471 கிராம் அளவுக்கு பால் நுகர்ந்து வருகிறார். ராஷ்ட்ரிய கோகுல் திட்டம் 2021- 2026 என திருத்தப்பட்டு, உள்நாட்டு மாட்டினங்கள், கறவைமாடு இனங்கள், பாரம்பரிய மாடு வகைகளைப் பாதுகாத்து அதன் உற்பத்தியைப் நவீன தொழில்நுட்பத்தின் உதவியில் பெருக்குதலாகும். உயர்ந்த கலப்பினங்கள் கொண்ட மாடுகளை விவசாயிகளுக்கு வழங்கும் விதத்தில் அவர்களின் வீடுகளுக்கே சென்று மாடுகளுக்கு சினை ஊசி செலுத்தப்படும்.
இந்த திட்டத்தன் நோக்கம் என்பது ஸ்திரமான உள்நாட்டு மாட்டினங்கள், கறவை மாடுகள் மற்றும் எருமை வளர்ப்பை ஆதரிக்கிறது, தேசிய இலக்குகளுடன் இணைந்து கால்நடைவளர்ப்புத் தொழில் லாபகரமானதாக்கலாம். பால் உற்பத்தியில் இந்தியா களங்கரைவிளக்காக இருந்து வருகிறது, பாரம்பரிய முறையில் மாட்டினங்களை வளர்த்தல் புத்தாக்கத்தை புகுத்தி பால் உற்பத்தியை அதிகப்படுத்தி, கிராமத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.
இவ்வாறு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீலகிரி மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்..!