தலிபான் அரசை இந்தியா ஏற்றுக்கொண்டதா..? தலிபான் தலைவருடன் இந்தியப் பிரதிநிதி சந்திப்பு..!
ஆப்கானிஸ்தானை நிர்வாகம் செய்து வரும் தலிபான் அரசை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் விதத்தில், தலிபான் அமைச்சருடன் இந்தியப் பிரதிநிதி சந்தித்துப் பேசியுள்ளார்.
காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு தலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஜனநாயக முறைப்படி இருந்த அரசை நீக்கிவிட்டு, தலிபான்கள் ஆட்சியை 2021ம் ஆண்டு கைப்பற்றி கடந்த 4 ஆண்டுகளாக ஆண்டு வருகிறார்கள். ஆப்கனில் தலிபான் அரசு அமைந்தவுடன் தூதரகரீதியான உறவை நிறுத்திய மத்தியஅரசு அங்கிருந்து அதிகாரிகளை அழைத்துக் கொண்டது. ஆனால், மனிதநேய அடிப்படையிலான உதவிகளை மட்டும் செய்து வந்தது. பிராந்திய அளவிலான கூட்டங்கள், மாநாடுகளில் ஆப்கானிஸ்தான் அமைச்சர்களை இந்தியப் பிரதிநிதிகள் சந்தித்திருந்தனர்.
ஆனால், அதிகாரபூர்வமா, இந்தியா சார்பில் சிறப்பு பிரதிநிதி ஆனந்த் பிரகாஷ், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்தித்பின்போது, இரு நாடுகளின் அரசியல் உறவுகள், வர்த்தகம், போக்குவரத்து கூட்டுறவு, பிராந்திய மேம்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் பிரதமரின் நெஞ்சில் கத்தியை வீசிய தாலிபான்கள்... இந்தியாவுடன் சேர்ந்து பயங்கர ட்விஸ்ட்..!
இரு நாடுகளின் பொருளாதார மற்றும் ராஜாங்க ரீதியான உறவுகளை வலுப்படுத்தவும், முன்னோக்கி கொண்டு செல்லவும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்பட்டது. பஹல்காம் தாக்குதலில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், இந்தியப் பிரதிநிதி பிரகாஷ் ஆப்கான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது ஆப்கானிஸ்தான் முதலீடுத் திட்டங்கள் குறித்து இந்திய பிரதிநிதியிடம் ஆப்கான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தற்போது முதலீட்டுக்கான நல்ல சூழல் இருப்பதாகவும் முதலீடு செய்ய அழைப்பு விடுத்ததாகவும், முதலீட்டுக்கு ஏராளமான வாயப்புகள் இருப்பதாகவும் குறிப்பாக சர்வதேச அளவில் கூட்டுறவுடன் செயல்படக்கூடிய துறைகளை உருவாக்கவும் பேசப்பட்டதாக ஆப்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியா, ஆப்கானிஸ்தான் மக்களிடையே கலாச்சார, பண்பாடு உறவு பரிமாற்றம் அவசியம் என்றும், அதற்கான அவசியத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
இந்திய பிரதிநிதி பிரகாஷ் தரப்பில் “ஆப்கானிஸ்தானுடனான நட்புறவு தொடரும் என்பதை உறுதி செய்யப்பட்டது. பல்வேறு துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது, ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் நோக்கம் குறித்தும் பேசப்பட்டது. இந்தியா சார்பில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள் தற்போது வைக்கப்பட்ட நிலையில் அதை மீண்டும் தொடங்குவது உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வது ஆகியவற்றில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பரம எதிரி இந்தியா..! பாகிஸ்தானை பழிவாங்க காத்திருக்கும் பகை நாடுகள் எத்தனை தெரியுமா..?