×
 

உலக பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் இந்தியாவிற்கு 85 வது இடம்

ஹென்லி பாஸ்போர்ட் சர்வே 2025

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலில் இந்தியா  85 வது இடத்திற்கு இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு இது 80 வது இடத்தில் இருந்தது.

ஹென்லி பாஸ்போர்ட் என்ற நிறுவனம்   2025 -க்கான இத்தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இது சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்தியேகத் தரவைப் பயன்படுத்தி, விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய நிலைகளின்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 57 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம், ஈக்வடோரியல்  கினியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுடன் 85வது இடத்தை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. 

இதையும் படிங்க: ஜிஎஸ்டி சர்வர் டவுன்! ரிட்டன் தாக்கல் இன்று கடைசி நாளில் வரி செலுத்துவோர் அவஸ்தை...

இதற்கு நேர்மாறாக, சிங்கப்பூர் அதன் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, அதன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

இதில் ஜப்பான் நாட்டு பாஸ்போர்ட் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம். பின்லாண்ட், இத்தாலி, சவுத் கொரியா, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் மூன்றாம் இடத்திலும் உள்ளன. உலகின் அதிக சக்தி வாய்ந்த நாடான அமெரிக்கா இந்த பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளது. 

நமது அண்டை நாடுகளான சைனா 60 ஆம் இடத்திலும், இலங்கை 96 ஆம் இடத்திலும், 
பாகிஸ்தான் நூற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது

இதையும் படிங்க: காங்கிரஸ்( இந்தியா) கூட்டணிக்கு சாவு மணி..! கலைத்து விடலாம் என உமர் அப்துல்லா அதிர்ச்சி..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share