×
 

முதியோருக்கான சலுகை பறிப்பு.. ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்..!

முதியோருக்கான சலுகையை திரும்பப் பெற்றதால் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.8,913 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு ரயில்வேயில் வழங்கப்பட்டு வந்த டிக்கெட் சலுகையை திரும்பப் பெற்றதால் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.8,913 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை பதில் அளித்துள்ளது. ரயில்வே துறையின் கீழ் செயல்படும் சிஆர்ஐஎஸ் எனப்படும் மத்திய ரயில்வே தகவல் முறை இந்த தகவலை அளித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே துறை சார்பில் இன்னும் டிக்கெட் சலுகை வழங்கப்படுகிறதா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே துறை ஏற்கெனவே ஒவ்வொரு பயணிக்கும் சராசரியாக 46% சலுகை கட்டணம் செலுத்தியுள்ளது என்றார்.

இதையும் படிங்க: உங்ககிட்ட இந்த ரயில் டிக்கெட் இருக்கா? நீங்கள் ஏசியில் பயணிக்கலாம்.. இந்த டிரிக்ஸ் தெரியுமா?

60வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் மூன்றாம்பாலினத்தவர்கள் டிக்கெட் கட்டணத்தில் 40%, 58வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% சலுகை அனைத்து வகுப்பிலும் 2020, மார்ச் 20ம் தேதிவரை சலுகை வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தொற்று நேரத்தில் முதியோருக்கு வழங்கப்பட்ட சலுகையை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

இந்நிலையில் 2020, மார்ச் 20ம் தேதி முதல் 2025, பிப்ரவரி 28ம் தேதி வரை முதியோர், மூன்றாம் பாலினத்தவர்களால் ரயில்வே துறைக்கு எவ்வளவு கூடுதலா வருவாய் கிடைத்துள்ளது என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ரயில்வே துறை முதியோர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என கடந்த 5 ஆண்டுகளில் 31.35 கோடிபேர் பயணம் செய்ததில் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.8913 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இது குறித்து ஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கவுர் கூறுகையில் “நான் கட்த 2020 மார்ச் 20ம் தேதி முதல் 2025 மார்ச் மாதம் வரை வருவாய் குறித்து பலமுறை ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டிருந்தேன்.நான் ஆய்வு செய்த வகையில் முதியோர் ஆண்கள் 18.25 கோடி பேரும், வயதான பெண்கள் 13.05 கோடி பேரும், மூன்ராம் பாலினத்தவர்கள் 43,536 பேரும் ரயிலில் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள். முதியோர் சலுகை பறிக்கப்பட்டபின் ரயில்வே ஆண் பயணிகளிடம் இருந்து  ரூ.11531 கோடியும், பெண் பயணிகளிடம் இருந்து ரூ.8599 கோடியும், மூன்றாம் பாலினத்தவர்களிடம் இருந்து ரூ.28.64 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.20,133 கோடி வருவாய் வந்துள்ளது. ஆண்களுக்கு 40% டிக்கெட் தள்ளுபடி, மகளிருக்கு 50 சதவீதம் சலுகை ஆகியவற்றை கழித்துப் பார்த்தால் ரயில்வேக்கு ரூ.8913 கோடி வருவாய் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் “சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் ரயில்வே சார்பில் போதுமான சலுகைகளை வழங்குகிறது. இதற்காக 2022-23ம் ஆண்டில் ரூ.56,993 கோடி டிக்கெட்டில் சலுகை வழங்கியுள்ளது சராசரியாக ஒவ்வொரு பயணிக்கும் 46% சலுகை தரப்படுகிறது. அதாவது ஒரு டிக்கெட்டின் உண்மையான விலை ரூ.100 ஆக இருந்தால், அதில் ரூ.54 மட்டுமே பயணியிடம் இருந்து பெறப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரயில் டிக்கெட்டை வைத்து வேறொரு ரயிலில் பயணம் செய்யலாம்.. இந்த விதி உங்களுக்கு தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share