×
 

ஆக்‌ஷனில் இறங்கிய இந்தியா.. அரண்டு போன பாகிஸ்தான்.. வெளியானது அதிரடி உத்தரவு..! 

சார்க் ஒப்பந்தப்படி விசா இன்றி இந்தியாவுக்கு வர இனி பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி இல்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது. 

காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதன் எதிரொலியாக சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை முதலே பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் தூதரக உறவு உட்பட அனைத்தும் முறிவு... மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப்பின் முடிவு!!

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு படைகளை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்துவதுடன், தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

பாகிஸ்தானிற்கு எதிராக பல்வேறு அதிரடி ஆக்‌ஷன்களை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம், பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம் என அடுத்தடுத்து அதிர்ச்சி நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. அந்த வரிசையில், சார்க் ஒப்பந்தப்படி விசா இல்லாமல் இந்தியாவிற்குள் இனி பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

அதேபோல் தொழில் மற்றும் வேலை காரணங்களுக்காக இந்தியாவிற்குள் விசா பெற்று வந்த பாகிஸ்தானியர்களும் 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி..! பிரதமர் தலைமையில் கூடியது அமைச்சரவை கூட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share