×
 

ராமன் ஆண்டாளும்.. ராவணன் ஆண்டாளும்.. அமெரிக்கா-சீனா மோதலிலும் அதிசயங்களை நிகழ்த்தும் இந்தியா..!

வர்த்தகக் கொள்கைகளில் மாற்றங்கள், நிதி உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகின்றன. இந்தக் காரணங்களால் பொருளாதாரம் தடம் புரண்டு போகலாம்.

ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளிவந்துள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் 6.5 சதவீத விகிதத்தில் வளரும். இது உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகத் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், உலகளாவிய வர்த்தக பதற்றங்கள், நிச்சயமற்ற தன்மை காரணமாக உலகப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 2.3 சதவீதமாகக் குறையும் என்று ஐக்கிய நாடுகளின் வர்த்தகம், மேம்பாட்டு மாநாடு கூறுகிறது. வலுவான அரசின் செலவுகள், இணக்கமான பணவியல் கொள்கைகள் காரணமாக இந்தியா தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஐக்கிய நாடுகளின் வர்த்தகம், மேம்பாட்டு மாநாட்டின் அறிக்கையில்,  'வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு தொலைநோக்கு பார்வை 2025 - அழுத்தங்கள், நிச்சயமற்ற தன்மைகள் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகளை மறுவடிவமைக்கின்றன' என்கிற தலைப்பில், ''உலகப் பொருளாதாரத்தில் பல வகையான அச்சுறுத்தல்கள் இருக்கிறது. வர்த்தகக் கொள்கைகளில் மாற்றங்கள், நிதி உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகின்றன. இந்தக் காரணங்களால் பொருளாதாரம் தடம் புரண்டு போகலாம்.

இதையும் படிங்க: சின்னதுரை மீதான தாக்குதல்..! பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!

2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீத விகிதத்தில் வளரும். இது 2024 இல் 6.9 சதவீதமாக இருந்தது, இது சற்று குறைவு. ஆனால், இந்தியா இன்னும் வேகமாக வளரும் பொருளாதாரமாகவே இருக்கும்.

இந்தியாவில் அரசின் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், பணவியல் கொள்கைகளும் இணக்கமாக இருக்கின்றன. இதனால், 2025 ஆம் ஆண்டில் இந்தியா 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டும். பிப்ரவரியில், இந்திய ரிசர்வ் வங்கி  ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக பாலிசி விகித ரெப்போவை 0.25 சதவீதம் குறைத்தது. இது மக்களின் செலவினத்தையும் தனியார் முதலீட்டையும் அதிகரிக்கும். தெற்காசியாவின் வளர்ச்சி விகிதம் 2025 ஆம் ஆண்டில் 5.6 சதவீதமாக இருக்கும். ஏனெனில் பணவீக்கம் குறைந்து வருகிறது.

உணவு விலைகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும் அபாயம் நீடிக்கும். சிக்கலான கடன் நிலைமை வங்கதேசம், பாகிஸ்தான்,  இலங்கை போன்ற பொருளாதாரங்களின் மீது சுமையை அதிகரிக்கக்கூடும். இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் கடன் சுமையை அதிகரிக்கக்கூடும்.

உலகப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. காரணம்,வணிகத்தில் பதற்றம், நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் வர்த்தக பதற்றங்கள், உலகம் முழுவதும் வணிகத்தைப் பாதிக்கின்றன. சமீபத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் பொருட்களின் விநியோகத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இதனால் எதிர்காலத்தை கணிப்பது கடினமாகிறது.

வர்த்தகக் கொள்கை முன்னணியில் நிச்சயமற்ற தன்மை வரலாற்று ரீதியாக உயர்ந்த மட்டங்களில் உள்ளது. அதன் விளைவு முதலீட்டு முடிவுகளில் தாமதம், குறைவான நியமனங்கள் வடிவில் காணப்படுகிறது. இதன் பொருள் வர்த்தகக் கொள்கைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, நிறுவனங்கள் முதலீடுகளைத் தாமதப்படுத்தி, குறைவான நபர்களை வேலைக்கு அமர்த்துகின்றன.

தற்போதுள்ள வர்த்தக, பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும். கொள்கைகள் அந்ததந்த பகுதிகள், உலக அளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நம்பிக்கையை மீட்டெடுக்கவும் வளர்ச்சியைப் பாதையில் வைத்திருக்கவும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. மக்களின் நம்பிக்கை நிலைத்திருக்கவும், பொருளாதாரம் மீண்டும் வேகமாக வளரவும் நாம் விரும்பினால், நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என அந்திக்கையில் கூறப்பட்டுள்ளது .

இதையும் படிங்க: இளம்பெண்களே டார்க்கெட்... ரகசியமாக அம்மாவாக்கும் எலான் மஸ்க்… பணத்தை காட்டி பந்தாட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share