×
 

அடேங்கப்பா... ரூ.3,400 கோடி டூ வெறும் ரூ.1,700: பணக்கார- ஏழை எம்.எல்.ஏக்களின் சொத்து வித்தியாசம்

டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் நான்கு எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

இந்தியாவின்  ஒரு பணக்கார எம்.எல்.ஏ.வின் சொத்து மதிப்பு ரூ.3,400 கோடி, அதேவேளை ஒரு ஏழை எம்.எல்.ஏ-வின் சொத்து ரூ.1,700 மட்டுமே. சமீபத்திய தேர்தல்களில் போட்டியிடுவதற்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் சமர்ப்பித்த பிராமணப் பத்திரங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த ஏ.டி.ஆர் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மும்பையின் கட்கோபர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பாஜகவின் பராக் ஷா, கிட்டத்தட்ட ரூ.3,400 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ-வாக உள்ளார் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம்  வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. அவரைத் தொடர்ந்து கர்நாடகாவின் கனகபுராவின் எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், ரூ.1,413 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

சமீபத்திய தேர்தல்களில் போட்டியிடுவதற்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் சமர்ப்பித்த சுயசாட்சிப் பத்திரங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் ஏ.டி.ஆர் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 28 மாநில சட்டமன்றங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,092 எம்.எல்.ஏ.க்களை உள்ளடக்கியது, பிரமாணப் பத்திரங்களை படிக்க முடியாத 24 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காலியாக உள்ள ஏழு சட்டமன்ற இடங்கள் தவிர.

இதையும் படிங்க: ‘ஹோலி’யன்று முஸ்லிம் ஆண்கள் ‘தார்பாலின் ஹிஜாப்’ அணியலாமே.. பாஜக எம்எல்ஏ கிண்டல் பேச்சு..!

மேற்கு வங்காளத்தின் இண்டஸைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நிர்மல் குமார் தாரா சொத்து மதிப்பு வெறும் ரூ.1,700 மட்டுமே.

பணக்கார எம்எல்ஏக்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு: ரூ.931 கோடி. ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி: ரூ.757 கோடி. கர்நாடகாவின் முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ கே.எச். புட்டசாமி கவுடா: ரூ.1,267 கோடி. கர்நாடகாவின் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியகிருஷ்ணா: ரூ.1,156 கோடி. டி.பி. எம்.எல்.ஏ பி. நாராயணா, ஆந்திரப் பிரதேசம்: ரூ.824 கோடி. டி.பி. எம்.எல்.ஏ வி. பிரசாந்தி ரெட்டி, ஆந்திரப் பிரதேசம்: ரூ.716 கோடி.

டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் நான்கு எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஐ.டி அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் இந்துப்பூர் எம்.எல்.ஏ என்.பாலகிருஷ்ணா உட்பட முதல் 20 பணக்கார எம்.எல்.ஏக்களில் ஏழு எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

எம்.எல்.ஏ.க்களின் மொத்த சொத்து மதிப்பு மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் (223 உறுப்பினர்கள்) மொத்தமாக ரூ.14,179 கோடி சொத்துக்களை வைத்துள்ளனர். இது நாட்டிலேயே அதிகபட்சம். மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்கள் (286 உறுப்பினர்கள்) ரூ.12,424 கோடி சொத்துக்களை வைத்துள்ளனர். ஆந்திரப் பிரதேச எம்.எல்.ஏ.க்கள் (174 உறுப்பினர்கள்) மொத்த சொத்து மதிப்பில் ரூ.11,323 கோடி சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர்.

மாறாக, மிகக் குறைந்த மொத்த சொத்து மதிப்புள்ள மாநிலங்களில்  திரிபுரா எம்.எல்.ஏ.க்கள் (60 உறுப்பினர்கள்) மொத்தமாக ரூ.90 கோடி, மணிப்பூர் எம்.எல்.ஏ.க்கள் (59 உறுப்பினர்கள்) - ரூ.222 கோடி, புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் (30 உறுப்பினர்கள்) - ரூ.297 கோடி.

ஒரு எம்.எல்.ஏ-வின் அதிகபட்ச சராசரி சொத்து மதிப்பு ஆந்திரப் பிரதேசம் - ரூ.65.07 கோடி. கர்நாடகா - ரூ.63.58 கோடி. மகாராஷ்டிரா - ரூ.43.44 கோடி. ஒரு எம்.எல்.ஏ-வின் மிகக் குறைந்த சராசரி சொத்து மதிப்பு, திரிபுரா - ரூ.1.51 கோடி, மேற்கு வங்காளம் - ரூ.2.80 கோடி, கேரளா - ரூ.3.13 கோடி 

4,092 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.73,348 கோடியாக உள்ளது. இது 2023-24 ஆம் ஆண்டில் நாகாலாந்து (ரூ.23,086 கோடி), திரிபுரா (ரூ.26,892 கோடி) மற்றும் மேகாலயா (ரூ.22,022 கோடி) ஆகிய மாநிலங்களின் ஒருங்கிணைந்த ஆண்டு பட்ஜெட்டுகளை விட அதிகமாகும்.

முக்கிய அரசியல் கட்சிகளில், பாஜக எம்எல்ஏக்கள் (1,653 உறுப்பினர்கள்) ரூ.26,270 கோடியை வைத்துள்ளனர். இது சிக்கிம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவின் ஆண்டு பட்ஜெட்டுகளை விட அதிகம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் (646 உறுப்பினர்கள்) ரூ.17,357 கோடியைக் கட்டுப்படுத்துகின்றனர். தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் (134 உறுப்பினர்கள்) ரூ.9,108 கோடி மொத்த சொத்துக்களைக் கொண்டுள்ளனர். சிவசேனா எம்எல்ஏக்கள் (59 உறுப்பினர்கள்) ரூ.1,758 கோடியைக் கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் (123 உறுப்பினர்கள்) கூட்டாக ஒரு எம்எல்ஏவுக்கு சராசரியாக ரூ.7.33 கோடியைக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் எம்எல்ஏக்கள் தூக்கி எறியப்படுவார்கள்.. சுவேந்து அதிகாரி பேச்சால் சர்ச்சை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share